சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 வெற்றியாளர் யார்? – இறுதிச்சுற்று 26 ஜூன் , மதியம் 3 மணி முதல்
ஸ்டார் விஜய்யின் அபிமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8ன் இறுதிச்சுற்று

நேயர்களின் அபிமான ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. குழந்தைகளுக்கான இந்த திறமை கண்டறிதல் போட்டி, அதன் இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு 26 ஜூன், மதியம் 3 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும். 2006 ஆம் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் நிகழ்ச்சி என்றென்றும் நேயர்களின் அபிமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. பல வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு, சூப்பர் சிங்கர் ஜூனியரின் சீசன் 8 இன் இறுதிப் போட்டிக்கான நேரம் இதோ வந்துவிட்டது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 வின்னர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல இளம் அறிமுகமில்லாத பாடகர்களுக்கு திரை உலகிற்கு அழைத்துச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த மேடையை அமைத்துக்கொடுத்துள்ளது, மேலும் உரிய பிரபல அந்தஸ்தை பெற்றுத்தந்துள்ளது எனலாம். இந்த நிகழ்ச்சியில் போட்டியிட்ட சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் திரையுலகில் முன்னணி பாடகர்களாகவும், உலகெங்கிலும் பல நிகழ்வுகளில் பங்கேற்று நட்சத்திரங்களாகவும் ஜொலித்துவருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், கே.எஸ். சித்ரா, கல்பனா, எஸ்பிபி சரண் ஆகியோர் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கின்றனர். இந்தநிகழ்ச்சியை மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கிவருகின்றனர். இந்த சீசனின் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களான த்ரிணித்தா, கிரிஷாங், நேஹா, அஃபினா மற்றும் ரிஹானா.
நேரடி

இவர்கள், மேலும் விருந்தினர்களாக வரும் பல பிரபல பாடகர்கள் முன்னிலையில், மிக பிரமாண்டமான மேடையில் தங்களின் திறமையை வெளிப்படுத்தவுள்ளனர். மேலும் பல ஆச்சரியமான, சுவையான நிகழ்ச்சிகள் அனைவருக்கும் காத்திருக்கிறது. இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 இன் நேரடி ஒளிபரப்பை 26 ஜூன் 2022 அன்று மதியம் 3 மணி முதல் ஸ்டார் விஜய்யில் காணாதவறாதீர்கள்.
Contents