சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 பிப்ரவரி 22 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு
இதோ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் ஆரம்பமாகிவிட்டது. நேயர்களின் அபிமான சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஒரு சிறந்த குரல் தேடல். இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 22 முதல் விஜய் டிவியில் தொடங்கும்.

இந்த நிகழ்ச்சி 2006 ஆண்டில் இருந்து நேயர்களின் அபிமான நிகழ்ச்சியாக விளங்கிவருகிறது. பல வெற்றிகரமான சீசன்களை கடந்து இப்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சீனியர்களில் 7 சீசன்களை முடித்து ஜூனியர்களுக்கான 7வது இதுவாகும்.
திறமைவாய்ந்த இளம் பாடகர்களை அடையாளம் கண்டு அவர்களை பெரும் புகழ் நோக்கி செல்லவைக்க ஒரு மேடையை அமைத்து தருவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் மூலம் நூற்றுக்கணக்கான இளம் கலைஞர்களை, திரையுலகின் இசைத்துறைக்கு அறிமுகம் செய்து அளித்துள்ளது இந்த சூப்பர் சிங்கர்.
ஏராளமான சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் இசை மேதைகளான ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், அனிருத் ரவிச்சந்திரன், இமான் , யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பாடல்களை பாடும் வாய்ப்பை சூப்பர் சிங்கர் மூலம் பெற்றுள்ளனர். மேலும் போட்டியில் வெல்லும் நபர்களுக்கு சிறந்த பரிசுத்தொகையும், வீடும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றவர்கள் மட்டுமல்லாது அதில் பங்கேற்பவர்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றனர்.
முந்தைய சீசன்களின் வெற்றியாளர்கள்: முதல் சீசனில், கிருஷ்ணமூர்த்தி சூப்பர் சிங்கர் படத்தை வென்றார். அவரை தொடர்ந்து அல்கா அஜித், ஆஜித் காலீக், ஸ்பூர்த்தி, ப்ரிதிகா, ஹ்ரிதிக் ஆகியோர் முறையே பட்டத்தை வென்றுள்ளனர்.
பாடகி சின்மாயி, நடிகர் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, திவ்யா, பாவ்னா பாலகிருஷ்ணன் மற்றும் பலர் இதுவரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.பிரபல பாடகர்கள் மனோ, மால்குடி சுபா, உஷா உதுப் மற்றும் பலர் முந்தைய சசீசன்களிள் நடுவர்களாக இருந்தனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 7, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல நிலை தேர்வு செயல்முறைகளில் பங்கேற்ற குழந்தைகள் தேர்வாகியுள்ளனர்.இந்த சீசன் சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 இல் பிரபல பின்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா மற்றும் நகுல் ஆகியோர் நாடுகர்களாக இடம்பெறுகின்றன.
நடிகர் நகுல் ஒரு பாடகராக இந்த போட்டியின் நடுவராக இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்குவார்கள் வரும் பிப்ரவரி 22, 2020 முதல் சூப்பர் சிங்கர் ஜூவரும் 7 பார்க்கத் தவறாதீர்கள், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.