பாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு
திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பல வெற்றி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு புத்தம் புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பாரதி கண்ணம்மா என்ற இந்த தொடர் நிச்சயம் நேயர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி.
பாரதி கண்ணம்மா என்ற இந்தக்கதையியல் கண்ணம்மா என்ற இளம் பெண் நல்ல குணம் உள்ளம் கொண்ட, அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட பெண்ணாகும். இவள் சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.

கண்ணம்மாவுக்கு அஞ்சலி என்ற மாற்றாந்தாய் சகோதரி இருக்கிறாள் அவள் புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள். அவளும் கண்ணம்மாவும் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் கதையில் சுவாரசியம் சேர்க்கும். கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒரு மாப்பிள்ளை அமைகிறது . இதிலிருந்து அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை இத்தொடரின் பார்க்கலாம்.

இந்த தொடரில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத் நடிக்கிறார் இவர் மேயாத மான் படத்தின் புகழ் ஆவார். இந்த தொடரில் மேலும் கதாநாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடிக்கிறார். இந்த தொடரின் அஞ்சலியாக நடிகை சுவீட்டி அவர்கள் நடிக்கிறார்.இந்த தொடரின் இயக்குனர் பிரவீன் பென்னெட், இந்த தொடரின் இசை அமைப்பாளர் இளையவன்.இந்த தொடர் காதல், பாசம், செண்டிமெண்ட் என பல உணர்ச்சிகளை கொண்டதாக இருக்கும். இந்த தொடரை வரும் திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் தவறாமல் பாருங்கள்.
