நடிகர் STR சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில்

விளம்பரங்கள்

தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பென்னி தயால், பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், மெலடி குயின் அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி சுவேதா மோகன் பங்கேற்கின்றனர்.

இம்முறை போட்டியாளர்கள் இரு அணிகளாக போட்டியிட்டு வருகின்றனர், இரு அணியினருக்கு இடையே இசை போர் நடந்தேறுகிறது. உன்னி மற்றும் ஸ்வேதா ஒரு அணியினரையும் பென்னி மற்றும் அனுராதா ஒரு அணியினரையும் வழிவகுக்கின்றனர். சமீபத்தில் போட்டியாளர் ராஜலக்ஷ்மி அவர்கள் நெசவு தொழில் பற்றி பாடிய நாட்டுப்புற பாடல் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரங்கள்

நடிகர் மாதவன் அவர்கள் இதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும் பேஸ் புக்கில் இதன் வீடியோ 16 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வார நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்க லிட்டில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் அவர்கள் வருகை தருகிறார். ஆமாம் சிம்புவின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

ரசிகர்களின் கரகோஷத்துடன் அரங்கையே அதிரவைத்தார். மேலும் STR அவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு இன்ப அதிர்ச்சியாக மனம்கவரும் இசை விருந்தளித்தார். போட்டியாளர்களின் பெர்பாமென்சுகளை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கண்டுகளித்தார். மேலும் பல உணர்ச்சிமிகு தருணங்களுடன் மகிழ்ச்சியும் கலந்து இசை விருந்தாக வருகிறது இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த வாரம் தவறாமல் பாருங்கள்.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.