அபி டெய்லர் என்பதன் முன்னோட்ட விளம்பரம் ஒளிபரப்பு
கலர்ஸ் தமிழில் புத்தம்புதிய நெடுந்தொடர் – அபி டெய்லர்

பெண்மையை போற்றி கொண்டாடுகிற, சுவாரஸ்யமிக்க, சிறப்பான கதை அம்சம் கொண்ட நெடுந்தொடர்களை ஒளிபரப்பிவருவதற்காக பிரபலமாக அறியப்படும் தமிழ்நாட்டின் மிக இளைய பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், ’அபி டெய்லர்’ என்ற பெயரில் புதிய நெடுந்தொடரை தொடங்கவிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களை நிகழ்ச்சியோடு ஈடுபாட்டுடன் ஒன்றுமாறு கட்டிப்போடப்போகும் ‘அபிடெய்லரின்’ முதல் முன்னோட்ட விளம்பரத்தை ஒளிபரப்பி பார்வையாளர்களது கவனத்தையும், எதிர்பார்ப்பையும் பெரிதும் ஈர்த்திருக்கிறது.
அபி டெய்லர் – புரொமோ லிங்க்
கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் இப்புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சி பற்றிய ஒரு சுவாரஸ்யமான முன்னோட்டத்தை இந்த புரொமோ விளம்பரம் வழங்குகிறது. ரேஷ்மா முரளிதரன், அபிராமி என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான தையற்கலை நிபுணராக அறிமுகமாவதுடன் இந்த புரொமோ தொடங்குகிறது.
அவரது கடையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளின் தொகுப்பை வெறும் 30 நொடிகளில் மிக வரிசைக்கிரமமாக அபிராமி அழகாக வர்ணிப்பதை இந்த புரொமோ சித்தரிக்கிறது. இதை சொல்லி முடித்து மூச்சு வாங்குவதற்காக நிற்கும்போது, மே 24ம் தேதியிலிருந்து தொடங்கி இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அபிடெய்லர் ஒளிபரப்பாகும் என்பதை இந்த விளம்பரம் எடுத்துரைக்கிறது.
சிறப்பான, சுவாரஸ்யமான கதையினை கொண்ட இந்த நெடுந்தொடர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இப்போதே பெறுவதற்கு இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாகிற அபி டெய்லரின் புரொமோ விளம்பரத்தை (யூடியூப் / சமூக ஊடக இணைப்பில்) கண்டுமகிழுங்கள்.