ராமாயணம் 15 ஜூன், திங்கள் – சனி 6 மணிக்கு விஜய் டிவியில்

விளம்பரங்கள்

திங்கள்-சனி 6 மணிக்கு விஜய் டிவியில் ராமாயணம்

விஜய் டிவி ராமாயணம்
Ramayanam Serial On Vijay TV

உலகளவில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்றான ராமாயணம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. பல வாரங்கள் ஊரடங்கில் வீட்டில் அடைந்திருக்கும் விஜய் டிவி நேயர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ராமானந்த சாகர் தயாரித்து, இயக்கியிருக்கும் இத்தொடர் வரும் ஜூன் 15, முதல் ஒளிபரப்பப்படும். இந்தத் தொடர் பல ஆண்டுகளாக நேயர்களின் மனதில் நீங்க இடம்பெற்று வரும் ஒரு தொடராகும். மேலும் பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த விஜய் டிவியில் அதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றால் மிகையாகாது.

விளம்பரங்கள்
செந்தூரப்பூவே
Senthoora Poovey Vijay TV Serial

இந்த நிகழ்ச்சியில் அருண் கோவில் ராமாவாகவும், தீபிகா சீதாவாகவும், சுனில் லஹ்ரி லட்சுமணாகவும் நடித்துள்ளனர். இதில் மூத்த நடிகர்களான லலிதா பவாரும் மந்தாராவாக நடித்தார். ராவணனாக அரவிந்த் திரிவேதியும், அனுமனாக தாரா சிங்கும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிருக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்த காவியம் ராமாயணம் தொடர் மூலமாக மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இது ராமன் 14 ஆண்டுகள் சீதா மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் சென்ற காவியத்தை பிரதிபலிக்கும்.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *