காதலே காதலே ! – காதலர் தினம் சிறப்பு நிகழ்ச்சி 14 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு \காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்ப தயாராக உள்ளது, நடனம், இசை மற்றும் காதல் ஆகியவற்றுடன் நட்சத்திரங்கள் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் ஒரு நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். இதில் நிஜ ஜோடிகள் மற்றும் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் பங்கேற்கின்றனர்.
காதலே காதலே நிகழ்ச்சி முற்றிலும் காதலர் தினத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். காதலுடன் நடனம் இசை மற்றும் புரிதல் போன்ற அணைத்து சிறப்பு பங்களிப்பும் இந்த ஜோடிகள் வழங்கவிருக்கின்றனர்.
இந்த காதல் நிகழ்ச்சியில் பங்கேற்க நிஜ வாழ்வில் தம்பதியர்களான சித்து – ஸ்ரேயா, சஞ்சீவ் – மானசா, வினோத் – சிந்து, மணிமேகலை – உசேன், நிஷா – ரியாஸ், தங்கதுரை – அருணா, ரேஷ்மா – மதன் பங்கேற்கின்றனர். திரையில் ஜோடிகளாக நடிப்பவர்கள் பிரஜின் – ரேஷ்மா, பவித்ரா – திரவியம், நவீன் – நேஹா, தர்ஷா அசார் – புகழ், அருண் – ஃபரினா, பாலா – ரித்விகா. மேலும் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா அவர்களின் பாடல்களுடன், காதலே காதலே நிகழ்ச்சி பல்வேறு காலகட்டங்களை காதல் ததும்ப நேயர்களை அழைத்துசெல்லவிருக்கிறது.பிப்ரவரி 14 மாலை 3 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்டார் விஜய் இல் மட்டுமே இந்த நிகழ்ச்சியைப் காணாத்தவறாதீர்கள்.