காமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு

Advertisement

நகைச்சுவை என்பது ஒரு சிறந்த மருந்து அந்த நகைச்சுவை திறமை ஒரு சிலருக்கு தான் இருக்கு. அப்படி நாம் சோகத்தில் இருக்கும்போது தங்கள் சிரிப்பு கலந்த நடிப்பு திறமையால் பலர் நம்மை சிரிக்க வைத்துள்ளனர். அப்படிப்பட்ட நடிப்பு ஜாம்பவான்களை அங்கீகரிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி தான் காமெடி அவார்ட்ஸ்.நகைச்சுவை ஜாம்பவான்களுக்கென்றே நடக்கும் விருது நிகழ்ச்சி என்பது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை. மேலும் பல நகைச்சுவை நடிகர்கள் ஒன்று கூடி நடக்க போகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது.

காமெடி அவார்ட்ஸ்
காமெடி அவார்ட்ஸ்

இந்த நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் உள்ள ட்ரேட் சென்டர் நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தொகுப்பாளினி DD அவர்கள். தன் துரு துரு பேச்சால் இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியி ல் பல வித விருது அணிவகுப்பு இருக்கிறது- சிறந்த நகைச்சுவை வசன எழுத்தாளர், சிறந்த நகைச்சுவை துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த நகைச்சுவை வில்லன் என பல விருதுகள் வழங்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கு சூரி, ரோபோ ஷங்கர், சதீஷ், டேனியல் போப், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆனந்த் ராஜ் என மேலும் பல முன்னணி நடிகர்களான செந். தில், கிரேசி மோகன், M.S. பாஸ்கர், மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். யார் யார் எந்த விருதை தட்டி சென்றனர் என்பதை காத்திருந்து பாருங்கள்?மேலும் சமீபத்தில், இணையத்தில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் கலகலப்பான தருணங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்

மேலும் மா கா பா, நிஷா மற்றும் ஹாரதி சேர்ந்து கலக்கும் அதிரடி நகைச்சுவை நடனத்தை காணத்தவறாதீர்கள். மேலும் நமது நகைச்சுவை ஜாம்பவான்களின் பிரபல பாடல்களை படி மகிழ்விக்க வருகின்றனர் நமது சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள். மேலும் பல சிறப்பு பெர்பாமன்சுகள் காத்துக்கொண்டிருக்கிறது. நகைச்சுவை, கொண்டாட்டம், கலந்த பல உணாச்சி மிகு தருணங்களை இந்த காமெடி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கண்டுமகிழுங்கள்.

Advertisement
You might also like

Leave A Reply

You email id will not publish to public