பிரபலங்கள், சமையல் வல்லுனர்களின் ருசியான உணவுகளுடன் நிறைவுக்கு வரும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி

விளம்பரங்கள்
Last Episodes of Colors Kitchen
Last Episodes of Colors Kitchen

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நிறைவுப் பகுதிக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர்களாக இந்தியா கேட் பாசுமதி அரிசி, எஸ்கேஎம் பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் மற்றும் ஹபெல் மற்றும் சிறப்பு ஸ்பான்சராக மகாராஜ் மசாலா ஆகியவை உள்ளன. இந்த சமையல் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி புகழ் நடிகை தனலட்சுமி மற்றும் சீதா ஆகியோர் பங்கேற்று சமையல் கலை வல்லுனர்கள் செப் தாமு மற்றும் செப் ஸ்ரேயா அட்கா ஆகியோருடன் சேர்ந்து வித விதமான ருசியான உணவுகளை உங்களுக்காக சமைத்துக் காட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வார இறுதியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆர்வத்தை தூண்டும் உணவு – பல்வேறு நறுமணமிக்க சுவைகளுடன் பார்வையாளர்களை கவர்வதற்காகபுகழ்பெற்ற சமையல் நிபுணரும் கின்னஸ் உலக சாதனையாளருமான செப் தாமு, 2 சுவையான உணவுகளை தயாரித்து உங்களை கவர்ந்திழுக்கதயாராக உள்ளார். இவர் தாமு தர்பார் பிரிவில் சிட்ரஸ் மொஜிடோ மற்றும் காரட் லட்டு ஆகிய உணவுகளை சமைக்க உள்ளார். இதில் அவர் ருசியான உணவுகளை சமைப்பதோடு பல்வேறு சமையல் குறிப்புகளையும் பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கிறார்.

பிரபலங்கள் பிரிவு – நிறைவு பகுதிக்கு வரும் இந்த நிகழ்ச்சியின் விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி பிரிவில் முழுமையான பொழுதுபோக்குடன் கூடிய ருசியான சமையலை தொலைக்காட்சி நடிகைகள் தனலட்சுமி மற்றும் சீதா ஆகியோர் உங்களுக்காக சமைக்க இருக்கிறார்கள். இவர்கள் நாவில் நீர் ஊறும் உணவுகளான குடமிளகாய் பிரெட் ஆம்லெட், பச்சை மிளகாய் அல்வா, மட்டன் ஷக்கலக்க பேபி மற்றும் மீன் கட்லெட் ஆகியவற்றை சமைக்கிறார்கள்.

விளம்பரங்கள்

சத்தான மகிழ்ச்சி – வார்த்தைகள் அன்பை வெளிப்படுத்தத் தவறும் போது, அதை உணவு செய்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக இந்தவார இறுதி நிகழ்ச்சியில் செப் ஸ்ரேயா அட்கா ருசியான சமையலை சமைத்து காண்பிப்பதன் மூலம் உங்களை கவர்ந்திழுக்க உள்ளார். அவர் சுட சுட சமையில் பிரிவில் பிரெட் ரவா டோஸ்ட் மற்றும் சாக்லேட் ப்ரூட் ஸ்மூத்தி ஆகியவற்றை சமைக்கிறார். அதேசமயம் ருசியில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் சத்தான சமையலை சமைப்பது குறித்து விவரிக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீரஞ்சனி தொகுத்து வழங்குகிறார். நிறைவு பகுதிக்கு வரும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

You might also like

Leave A Reply

You email id will not publish to public