பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘அபி டெய்லர்’ சீரியலின் 2வது ப்ரோமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்

பல்வேறு புதுமையான மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலான, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் அபி டெய்லரின் இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பிரபல நகைச்சுவை நடிகரான படவா கோபி முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கியுள்ளது.
இன்று ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ அபிராமி மற்றும் அவரது அமைதியான குடும்பம் பற்றியதாகும். இதில் அபிராமியாக ரேஷ்மா முரளிதரன் நடித்துள்ளார். அவரது தந்தையாக சுந்தரமூர்த்தி என்ற பெயரில் நகைச்சுவை நடிகர் படவா கோபி நடிக்கிறார். மேலும் இந்த ப்ரோமோவில் அபிராமியின் தங்கையாக ஆனந்தி என்ற பெயரில் நடிக்கும் ஜெயஸ்ரீ மற்றும் அரவிந்த் என்ற பெயரில் தம்பியாக நடிக்கும் சஞ்சய் ராஜா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த புதிய ப்ரோமோ பார்வையாளர்களை சிந்திக்க வைத்து அவர்களை கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அபிராமியின் குடும்பத்திற்கு ஹலோ சொல்லத் தயாராகுங்கள்.

இந்த ப்ரோமோவை சமூக இணையதளங்களில் பார்த்து ரசித்திட கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யுங்கள்