தேன்மொழி திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும்
விஜய் டிவி தேன்மொழி
விஜய் தொலைக்காட்சி மேலும் ஒரு புத்தம் புதிய தொடர்கதையை தொடங்கியுள்ளது. தேன்மொழி, என்னும் இந்த புத்தம் புதிய மெகாத்தொடர், திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும்.
ஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன் மொழி, ஒரு சுட்டித்தனமான கவலைகள் ஏதும் வைத்து கொள்ளாத ஒரு பெண்.

நடிகர்கள்
அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தை கொண்ட தேன் மொழி சூழ்நிலைகள் காரணமாக கிராமத்து பஞ்சாயத்தில் தலைவர் போட்டிக்கு நிற்கிறார் தேன் மொழிக்கு அருள் என்னும் ஒரு அரசியல் சார்ந்த பணக்கார வீட்டு பையன் மீது காதல் ஆசை ஏற்படுகிறது, அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைத்து கொள்கிறார். தேன் மொழி தேர்தலில் வெற்றி பெறுவாள் என கணித்து அவளை அருளுக்கு திருமணம் செய்து தேன் மொழியை மருமகளாக ஆக்க நினைக்கிறார்கள் அருளின் குடும்பம். தேன் மொழிக்கும் அருளுக்கும் திருமணமாகிறது. அருளுக்கு தேன் மொழி மீது காதல் மலருமா? தேன் மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா? என்பதை காணத்தவறாதீர்கள்.

ஆன்லைன் சீரியல் எபிசொட்
இந்த தொடரில் தேன் மொழியாக பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ஜாக்குலின் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தொலைக்காட்சி தொடரில் பயணிக்கவுள்ளார். மேலும் இந்த தொடரில் அருளாக தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் நடிக்கிறார். இந்த தொடர் கதையின் இயக்குனர் கதிரவன் அவர்கள். இந்த தொடரில் சிரிப்பு, காதல், மோதல் என பல அம்சங்கள் கொண்டதாக இருக்கும். இந்த தொடரை திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
Contents