நீ எங்கே என் அன்பே – நயன்தாரா நடித்த திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

விளம்பரங்கள்
Nee Enge En Anbe WTP

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக நயன்தாரா நடித்த ‘கிரைம் த்ரில்லர்’ திரைப்படமான ‘நீ எங்கே என் அன்பே’ என்னும் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது. இந்த திரைப்படம் வரும் 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பொழுதுபோக்கு நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அந்த வரிசையில் இந்த மாதம் ‘நீ எங்கே என் அன்பே’ என்னும் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது. இந்த படத்தை புகழ்பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இதில் வைபவ் ரெட்டி, பசுபதி, ஹர்ஷ்வர்தன் ராணே மற்றும் நரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

விளம்பரங்கள்

இந்த திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இது சுஜோய் கோஷின் இந்தி திரைப்படமான கஹானி படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். தகவல் தொழில்நுட்ப நிபுணரான அனாமிகா (நயன்தாரா) வேலை விஷயமாக ஐதாராபாத்திற்கு வருகிறார். அப்போது அவரது கணவர் காணாமல் போய்விடுகிறார். போலீஸ் அதிகாரி சாரதி (வைபவ்) உதவியோடு தனது கணவரை தேடுகிறார் அனாமிகா. அப்போது அவரின் கணவரைப் பற்றி பல்வேறு திடுக்கிடும் விஷயங்கள் வெளிவருகிறது.

இதனைத் தொடர்ந்து கதையானது பல்வேறு திருப்பங்களுடன் உணர்ச்சிபூர்வமாக செல்கிறது. கடைசியில் அனாமிகா எப்படி தனது கணவரை கண்டுபிடித்தார் என்பதையும் அப்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளையும், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் வகையில் இயக்குனர் இந்த படத்தை இயக்கி உள்ளார். எனவே இந்த வார கடைசியில் மகிழ்ச்சியாக பொழுதைபோக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். ‘நீ எங்கே என் அன்பே’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள்.

Share
தமிழ் சேனல் செய்திகள்