பிக் பாஸ் கொண்டாட்டம்

விளம்பரங்கள்

மணி ஒன்பது ஆனவுடன் தினமும் பிக் பாஸ் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு பழக்கமாகி விட்டது. பிக் பாஸ் முடிந்து சில நாட்களே ஆகிவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை பெரும்பாலானோர் மிஸ் செய்கிறார்கள் இதன் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிக்கு புது வரவு என்றாலும் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது.

இந்திய அளவில் சோசியல் மீடியாகளிலும் வைரலாகியது. இப்படி கிடைத்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையிலும் நம் அபிமான பிக் பாஸ் நட்சத்திரங்கள் ஒரு குடும்பமாக ஒன்று கூடி கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் கொண்டாட்டம். நம் பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து பார்க்க ஆசைதான்.

விளம்பரங்கள்

அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நம் அபிமான பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரும் வருகைதந்தனர். அதில் ஓவியா, ஆரவ், ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி, வையாபுரி காயத்ரி ரகுராம், ரைசா, சினேகன், பரணி, ஷக்தி, ஹாரதி கஞ்சா கருப்பு, சுஜா வருணி, கணேஷ் வெங்கட்ராம், காஜல், ஜூலியானா மற்றும் அனுயா.

இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் நட்சத்திரங்கள் மற்றுமல்லாமல் நம் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களான கோபிநாத் அவர்கள், ரியோ, மா கா பா , ராஜா ராணி தொடர் ஆலியா மானசா, சஞ்சீவ், ரக்ஷன், ஜாக்லின், பாவனி ரெட்டி, மகேஷ் மற்றும் நம் அபிமான சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து பல கண்கவர் பெர்பாமன்சுகளை கொடுக்க விருக்கின்றனர். நமது பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து பல மகிழ்ச்சி நிறைந்த டாஸ்குகளும் நடத்தப்படும். மேலும், பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கிறது, அதனால் ஞாயிறு மாலை 3 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.