வில்லா டு வில்லேஜ் – சனி மற்றும் ஞாயிறு, இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்

வில்லா டு வில்லேஜ்

விஜய் தொலைக்காட்சியில் ஒரு புத்தம் புதிய அசத்தலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. வில்லா டு வில்லேஜ், இந்த தலைப்பிற்கு ஏற்றவாறு வில்லாவில் வாழ்ந்து பழகியவர்களை வில்லேஜில் வாழ்ந்தால் என்னவாகும்.

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் நகரத்தை சேர்ந்த பனிரெண்டு பெண்கள், கிராமத்து வாழ்க்கையை கையாண்டு காட்டப்போகின்றனர். இதற்கெல்லாம் மேல், பணம் மற்றும் எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல் நாற்பது நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கி அந்த சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து காட்டவேண்டும் அதுதான் போட்டி.

அந்த கிராமத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தினசரி பணிகள் மற்றும் சவால்களை அவர்கள் செய்து முடித்தால் தான் அங்கு தாக்குப்பிடிக்க முடியும். அந்த கிராமத்தின் மக்கள் தான் இந்த போட்டியாளர்களுக்கு நடுவர்கள். இந்த நகரத்து அழகிகளும் அந்த மக்களுக்கு தங்களால் கிராமத்து வாழ்க்கையையும் வாழ்ந்துகாட்ட முடியும் என்பதை நிருபித்துக் காட்டவேண்டும்.

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் கிராமப்புற வாழ்க்கையை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளளலாம். அந்த கிராமத்து வாழ்க்கையை அழகாக கையாண்டு வாழ்ந்துகாட்டும் அந்த ஒரு போட்டியாளர் அழகியாக பட்டம் சூட்டப்படுவார். அந்த கிராமத்து மக்களின் மனதில் இடம்பிடித்து பட்டத்தை தட்டி செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார்?

இப்படி சுவாரசியமும் குதூகலமும் நிறைந்த இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது தொகுப்பாளர் ஆண்ட்ருஸ் (ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருப்பவர்). யார் அந்த 12 போட்டியாளர்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? வருகிற சனிக்கிழமை அன்று இந்த புத்தம் புதிய நிழச்சியின் தொடக்கத்தில் அதை தெரிந்துகொள்ளலாம். நேயர்களுக்கு இன்ப அதிர்ச்சிகள் நிறைய காத்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை

இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 17 முதல் சனி மற்றும் ஞாயிறு, இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் காணாதவறாதீர்கள்.

You might also like

Leave A Reply

You email id will not publish to public