விஜய் டெலிவிஷன் விருதுகள் 2023 – மே 14 மற்றும் 21 ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

விளம்பரங்கள்

பெருமைவாய்ந்த 8ம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருதுகள்

Winners of Vijay Television Awards
Winners of Vijay Television Awards

விஜய் தொலைக்காட்சியின் அபிமான நட்சத்திரங்கள் பல்வேறு வகையான விருதுகளைப் பெறுவதற்காக ஒரு பிரமாண்டமான மேடையில் ஒன்று கூடும் நேரம் இது.

தமிழ் தொலைக்காட்சியில் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான விஜய் டெலிவிஷன் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அரங்கேறும். நேயர்களின் ஆதரவு பெற்று அமோக வரவேற்[பில் இந்த விருது வழங்கும் விழா 8வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த விருது வழங்கும் விழா சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

ஸ்டார் விஜய் தனது நிகழ்ச்சிகளின் மூலம் பல நூறு நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது. அவர்களை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் விஜய் தொலைகாட்சி என்றும் தவறியது இல்லை. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ். இந்த விருதுகள் வழங்கும் விழா 8வது ஆண்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு அதாவது மே 14 மற்றும் 21 ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Vijay Television Awards Winners
விஜய் தொலைக்காட்சி விருதுகள்

விஜய் டிவி எப்போதும் சிறந்த திறமைகளை வளர்த்து வருகிறது, அவர்களை எப்போதும் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது.
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த முற்றிலும் பொழுதுபோக்கு நிறைந்த, நடிகர் நடிகைகளின் நண்பர்கள் மற்றும் உறவுகள் ஒன்றுசேர்ந்து இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக எடுத்துச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள்

இதில் ஏராளமான காலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளுடன் இந்நிகழ்வு மூன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படும், மா கா பா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, ஈரோடு மகேஷ் மற்றும் நட்சத்திரா இந்த விருது வழங்கும் விஷாவை தொகுத்து வழங்குகிறார்கள்.

விருது

பாக்யலஷ்மி சீரியலுக்காக சிறந்த கதாநாயகி சுசித்ரா (பாக்யா), பாண்டியன் ஸ்டோர்ஸுக்காக சிறந்த ஹீரோ வெங்கட் (ஜீவா), சிறந்த வில்லன் ரேஷ்மா (ராதிகா), சிறந்த நகைச்சுவைக்கு – குரேஷி 15 ஆண்டுகள் சாதனை விருது ஈரோடு மகேஷ், சிறந்த தொகுப்பாளர்கள் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே, பிரபல ‘ஜோடி’ விருது ராமர் மற்றும் மதுரை முத்து, சிறந்த கதாபாத்திர ஜோடி சித்தார்த் & கேப்ரியல்லா (ஈரமான ரோஜாவே), சிறந்த இயக்குனர் (மறைந்த) திரு. தாய் செல்வம் (ஈரமண ரோஜாவே 1 & 2), சிறந்த கேம் ஷோ ‘அண்டாகாகசம்’, இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு ஸ்வாதி கொண்டே, சிறந்த கண்டுபிடிப்பு ஷிவின் (பிக் பாஸ்) மற்றும் பல விருதுகள் வழங்கப்பட்டது.

ஜி.பி.முத்து வின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி ‘ஆடம்’ ல் ஆண்ட்ரி மற்றும் காளையன் ஆகியோருடன் இணைந்து இடம்பெறும். ‘பாம் கேர்ள்ஸ்’ நிகழ்ச்சியில் பெண்களின் சிறப்பான ஒரு ஸ்டண்ட் ஆக்ட் இடம்பெறும். குமரன் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), வினோத் (தென்றல் வந்து என்னைத் தொடும்) சித்தார்த் (ஈரமண ரோஜாவே) ஆகியோரின் ‘விக்ரம்’ சிறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் விக்ரம்2 படத்தின் ரோலக்ஸ், டில்லி மற்றும் சந்தானம் கதாபாத்திரத்தை நகைச்சுவைக்காக மீண்டும் உருவாக்கி நடித்துள்ளனர்.

8வது ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகள் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு பிரம்மாண்ட விழாவாகும். வரும் ஞாயிறு மே 14 மற்றும் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விஜய் டிவியில் காணாதவறாதீர்கள்!

Vijay Television Awards 2023
Vijay Television Awards

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *