தமிழ் கடவுள் முருகன் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

|
விளம்பரங்கள்

தமிழ் தொலைக்காட்சியை திரும்பி பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அந்த நேரத்தில் என்ன நிகழ்ச்சி வரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களுக்கு, இன்பம் அளிக்கும் வகையில் பக்தி மிகு காவியம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது. அதுவே தமிழ் கடவுள் முருகன். இந்த பக்தி மிகு காவியம் வரும் அக்டோபர் 2, திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த தொடர் முற்றிலும் முருக பெருமானின் திருக்கதையை சுற்றி அமையும். தமிழின் பெருங்காவியமான கந்தபுராணத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த தமிழ் கடவுள் முருகன். இந்த தொடரில் முருகனின் பிறப்பு முதல் சூரசம்ஹாரம் வரை அனைத்தும் கூறப்படும். தமிழ் தொலைக்காட்சியின் வரலாற்றில் மிக பெரிய பொருள் செலவில் எடுக்கப்படும் ஒரு தொடர்கதையாக இருக்கும் இந்த தொடர். விசுவல் எபக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பத்தின் உதவியோடு நேயர்களின் கண்களுக்கு ஒரு பிரமாண்டமான விருந்தாக இருக்கும், இந்த தமிழ் கடவுள் முருகன்.

தமிழ் கடவுள் முருகன் தொடர் முருக பெருமானின் போர் வீரத்தையும், அன்பிற்கே இன்னொரு வடிவமாக திகழும் கதையை பற்றியதாகும். சூரபத்மனின் கொடுமை ஆட்சி தலை விரித்து ஆடும் காலத்தில், ஒரு நாயகனின் வருகை அவசியமாக இருந்தது. தந்தை சிவா பெருமான், தீய சக்தியை அளிப்பதற்கே தன் வாழ்கை பிறப்பை அர்ப்பணிக்க வேண்டும் தம் மகன் முருகன் என்று விரும்பினார், மறுபுறம் பார்வதி தேவி கருணையுடன் நடந்துகொள்வதும் மிக முக்கியம் என்று கருதினர்.

விளம்பரங்கள்

இப்படி வெவ்வேறு கருத்துக்களுக்கு இடையே தனக்கு உகந்தது எது என்று கேள்விகள் கேட்டு அறிந்துகொண்டு அதன்படி கற்றார் முருக பெருமான். இந்த தொடரில் பல கத பாத்திரங்கள் உள்ளன. மாப்பிளை தொடரின் புகழ் இந்திரா பிரியதர்ஷினி இந்த தொடரில் பார்வதி தேவியாக நடிக்கிறார். மேலும் முருகனாக பேபி அனிருதா நடிக்கிறார். தமிழ் தொலைக்காட்சி நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரமான சிவா பெருமானாக நடிக்கிறார்.

தமிழ் வழி வந்த அறுபடை வீடு கொண்ட திருமுருகனின் கதையை காணத்தவறாதீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *