நீல குயில் விஜய் தொலைக்காட்சி தொடர் – திங்கள் முதல் சனி வரை, மதியம் 3 மணிக்கு

தமிழ் தொலைக்காட்சி தொடர் நீல குயில்

நீல குயில்
நீல குயில் – தமிழ் தொலைக்காட்சி தொடர்

விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது நீல குயில் வரும் டிசம்பர் 13 முதல், திங்கள் முதல் சனி வரை, மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் மேலும் பல தொடர்கதைகள் மதியம் ஒளிபரப்பாகிறது. அவளும் நானும் மதியம் 12.30 மணிக்கு, ராதா கிருஷ்ணா மதியம் 1.30 மணிக்கு கல்யாணமாம் கல்யாணம் மதியம் 1 மணிக்கு, பொன்மகள் வந்தால் மதியம் 2 மணிக்கு, ஈரமான ரோஜாவே 2.30 மதியம் மணிக்கு, ஒளிபரப்பாகிறது.

கதை

இந்த கதையில் சிட்டு என்னும் பழங்குடி கிராமத்து பெண் சூழ்நிலை காரணமாக அந்த ஊரை பற்றி தெரிந்துகொள்ள வரும் ஜெய் சூர்யாவுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கபடுகிறது. இவர் வேறுஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டவர். அந்த கிராமத்தினர் ஜெய் சூர்யாவுடன் சிட்டுவை நகரத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். சிட்டுவுடன் திருமணம் ஆனதை மறைத்து விடுகிறார் குடும்பத்தினரிடம். அந்த வீட்டிலேயே கிட்டுவும் வேலைக்காரியாக தங்கி விடுகிறார் இந்த உண்மையை எப்படி அனைவருக்கும் தெரிவிப்பார் சிட்டு ஜெய் சூர்யாவின் காதலை வெல்வாரா?

ஹாட் ஸ்டார் விண்ணப்ப பதிவிறக்கம்
ஹாட் ஸ்டார் விண்ணப்ப பதிவிறக்கம்

நடிகர் மற்றும் நடிகை

இந்த தொடரில் ஜெய் சூர்யாவாக நடிகர் சத்யா நடிக்கிறார் இவர் முதல் முறையாக தமிழ் தொலைக்காட்சிக்கு அடி எடுத்து வைக்கிறார். இந்த தொடரில் மேலும் மலையாள தொலைக்காட்சியின் பிரபலமான ஸ்நிஷா இந்த தொடரில் கதா நாயகியாக கதாநாயகி சிட்டுவாக நடிக்கிறார். இந்த தொடரின் ராணியாக நடிகை சந்தனா அவர்கள் நடிக்கிறார்.

இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர். இந்த தொடரின் இயக்குனர் ஜெயக்குமார் அவர்கள், மேலும் இந்த தொடரின் இசை அமைப்பாளர் ராஜீவ் அட்டுகல் அவர்கள். இந்த தொடர் காதல், பாசம், செண்டிமெண்ட் என பல உணர்ச்சிகளை கொண்டதாக இருக்கும். இந்த தொடரை தவறாமல் பாருங்கள் மதியம் 3 மணிக்கு.

அவளும் நானும்
அவளும் நானும்
You might also like

Leave A Reply

You email id will not publish to public