தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – 16 ஏப்ரல் 2023, ஞாயிறு காலை 11.30 மணிக்கு

விளம்பரங்கள்

தமிழகத்தின் பெருமைமிகு நிகழ்ச்சி – தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
Tamizh Pechu Engal Moochu

தமிழகத்தின் மக்களிடையே நிலவும் தமிழ் மொழியின் மீதான பற்று மற்றும் தமிழ் உணர்ச்சியை மேலோங்கச்செய்ய ஸ்டார் விஜய் அணைத்து விதத்திலும் முக்கியத்துவம் அளித்துவருவதில் பெருமகிழ்ச்சிகொள்கிறது. தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என்ற தலைப்பில் மதிப்புமிக்க இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்பு நேயர்களுக்கு அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை மீண்டும் தொடங்குவதில் பெருமை கொள்கிறது. தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிய உடனேயே இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 16, 2023 முதல் ஒளிபரப்பாகும். தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கண்டுபிடிப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை என பல இடங்களில் திறமையான தமிழ் சொற்பொழிவாளர்களுக்காக ஸ்டார் விஜய், மாநிலம் முழுவதும் தீவிர தேர்ச்சியை நடத்தியது. இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட திறமையாளர்கள் கலந்து கொண்டனர், அவர்களில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில், முதல் இருபத்தைந்து போட்டியாளர்கள் இந்த மேடைக்கு வர உள்ளனர். இதேபோல், ​​நிகழ்ச்சியின் போது கதை, கவிதை வாசிப்பு, விவாதம் மற்றும் சொற்பொழிவு என பல்வேறு சுற்றுகளைக் கடந்து செல்வார்கள். தமிழகத்தின் சிறந்த தமிழ் சொற்பொழிவாளர் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையையும் வெற்றிப்பரிசாக பெறுவார்.

புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களான டாக்டர் ஜி.ஞானசம்பந்தம் மற்றும் பர்வீன் சுல்தானா ஆகிய புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் நடுவர்களாக இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் அனிதா சம்பத் (பிக் பாஸ் புகழ்) தொகுத்து வழங்குகிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தமிழ் மொழிக்கு மரியாதை மற்றும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், நிகழ்ச்சியைப் பற்றி சில வார்த்தைகள் பேசினார் என்பது பெருமைமிகு செயலாகும்.

விளம்பரங்கள்

மேலும் அவருடன் இணைந்து மிக முக்கிய நபர்களான திரையுலக ‘உலகநாயகன்’ பத்மஸ்ரீ கமல்ஹாசனும் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரு. தொல் திருமாவளன், திரு அன்புமணி ராமதாஸ், திரு. வைகோ, திரு. அ.முத்துலிங்கம், திரு. நாஞ்சில் சம்பத், திரு.ஜெயமோகன் – எழுத்தாளர், பேச்சாளர்மதன் கார்க்கி பாடலாசிரியர், ஆகியோரும் நிகழ்ச்சி குறித்த தனது மேலான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி, ஒரு மொழி மட்டுமல்ல இது ஒரு வாழ்க்கை முறையாகும் என்பதில் ஸ்டார் விஜய் எப்போதும் பெருமிதம் கொள்கிறது.

வரும் ஞாயிறு இடம்பெறும் முதல் நிகழ்ச்சியில் தெலுங்கானாவின் ஆளுநர் திருமதி டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஏப்ரல் 16, 2023 அன்று ஸ்டார் விஜய்யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *