சூப்பர் சிங்கர் சீசன் 9 கிராண்ட் பைனல்ஸ் 25 ஜூன் 2023 அன்று – பிற்பகல் 3 மணி முதல்
அபிஜித், அருணா, பூஜா, பிரசன்னா மற்றும் பிரியா ஜெர்சன் சூப்பர் சிங்கர் 9 தமிழ் இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் மிஸ்டு கால் எண்கள்

இதோ நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான க்ராண்ட் பைனல்ஸ் போட்டி. கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மக்களின் விருப்பமான நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் தற்போது ஒன்பது சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் விஜய்யில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 9 இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, இது 25 ஜூன் 2023 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஸ்டார் விஜய்யில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஸ்டார் விஜய் இன் இந்த முதன்மை நிகழ்ச்சி 2006 இல் தொடங்கப்பட்டது. திரைப்பட இசைத்துறையில் சிறந்த இளைஞர்களை இந்த நிகழ்ச்சி மூலம் தேர்வுசெய்வதில் முதன்மையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கடுமையாக பாடுபடும் பல இளம் அறிமுகமில்லாத பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு மேடையாகும். போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களுக்கு உரிய அந்தஸ்தை இந்த நிகழ்ச்சி வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியிட்ட சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் திரையுலகில் முன்னணி பின்னணிப் பாடகர்களாகவும், உலகெங்கிலும் உள்ள பல நிகழ்வுகளில் பங்கேற்று நட்சத்திரங்களாகவும் ஜொலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக புகழ்பெற்ற அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் ஸ்வேதா மோகன் மற்றும் பென்னிதயால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ம கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்குகின்றனர். மேலும் புகழ்பெற்ற பாடகர் கே.எஸ். சித்ரா, புஷ்பவனம் குப்புசாமி, ஆண்டனி தாஸ் மற்றும் குரல் வல்லுனர் ஆனந்த் வைத்தியநாதன் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இறுதிப் போட்டியாளர்கள்
இந்த சீசனின் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களான அபிஜித், அருணா, பூஜா, பிரியா ஜெர்சன் மற்றும் பிரசன்னா ஆகியோர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பழம்பெரும் பாடகர்கள் முன்னிலையில் பிரமாண்ட மேடையில் இறுதிப்போட்டியில் படவிருக்கின்றனர்.
இவர்கள் நேயர்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். பார்வையாளர்கள் ஹாட் ஸ்டார் மூலம் தங்களுக்குப் பிடித்த பாடகர்களுக்கு வாக்களிக்கலாம் அல்லது அபிஜித்துக்கு 7288877601, அருணாவுக்கு 7288877604, பூஜாவுக்கு 7288877608, பிரசன்னாவுக்கு 7288877609, ப்ரியாவுக்கு 7288877610 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும். 25 ஜூன் 2023 அன்று மதியம் 3 மணி முதல் சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் விஜய் இல் மட்டும் பார்க்கத் தவறாதீர்கள்.
