சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு

வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது – சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று

மிக பிரபலமான, மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இறுதி சுற்றை நெருங்கியுள்ளது வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதி போட்டியாளர்கள்

அந்த கனவுகளை நினைவாக்கும் ஒரு மேடை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து இசை துறைக்கு பல பாடகர்களை தந்துள்ளது.கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசை கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதி போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் – அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் அனைவரும் அந்த பிரமாண்ட மேடையில் பாட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்த பிரமாண்ட சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

வெற்றி பெயர்

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர் ஷங்கர் மஹாதேவன் ,பாடகி சித்ரா, பாடகர் SPB சரண் மற்றும் பாடகி கல்பனா அவர்கள் இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இந்த இறுதிச்சுற்று போட்டியிலும் நடுவர்களாக போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வருகிறார்கள்.

பெருமைவாய்ந்த பல இசை கலைஞர்களை பார்த்த இந்த மேடை. இன்று வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வரும் சூப்பர் சிங்கர்ஸ், இந்த பிரமாண்ட மேடையில் பல இசை ஜாம்பவான்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் முன் பாடி அற்புதமான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர். இந்த முறை கிராண்ட் ஃபினாலே லைவ் இன்னும் பிரமாண்டமாய் அரங்கேறவிருக்கிறது. இந்த கிராண்ட் ஃபினாலேவில் பல சுவாரசியமான இசை விருந்துகள் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள் , சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

வாக்களிப்பு முறை

இம்முறை இவர்களின் கடின முயற்சி திருவினை ஆக்க உங்களது விருப்பமான பாடகருக்கு டைட்டில் கிடைக்க, Super Singer vote என Google search செய்து உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்கலாம், ஏப்ரல் 13 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 21 அன்று நேரலையில் இரண்டாவது சுற்று முடிந்து 5 நிமிடம் வரை வாக்களிக்கலாம். இன்னும் பல பாடல்களும், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேரவுள்ளது, காணத்தவறாதீர்கள்!!!

You might also like

Leave A Reply

You email id will not publish to public