சூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு

விளம்பரங்கள்

சூப்பர் சிங்கர் 7

தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பும் இம்முறை உண்டு. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பல ஹிட்களை கொடுக்கும் இளம் இசை அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் அவர்களும் இணைகிறார்.

சூப்பர் சிங்கர் 7
சூப்பர் சிங்கர் 7

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பெரிய ஒரு வாய்ப்பாக இவர் முன் தனது திறமையை காட்டும் ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும் சமீபத்தில் வெளியான ப்ரோமோ பலராலும் பேசப்படுகிறது இதில் அனிருத் அவர்கள் தனது இசை பயணம் எப்படி இருந்தது என்பது பற்றியும் கஷ்டங்களை பற்றியும் பேசி உள்ளார் மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு பெரிய மேடை என்பதையும் கூறியுள்ளார்

விளம்பரங்கள்

சூப்பர் சிங்கர் 7 Telecast

ஆயிரம் கனவுகளை நிஜமாக்கிய ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் என்றால் எல்லா வயதினறும் அடங்குவர். இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது வரும் ஏப்ரல் 27 முதல், சனி மற்றும் ஞாயிறு, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. பாட்டு, ஸ்வரம், ஸ்ருதி என பாமர மக்களும் இசை மொழி பேசத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியை பார்த்து தான். 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்பொழுது உலக அளவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது.

சூப்பர் சிங்கர் 7 Contestants

நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும் ஆனந்தரவிந்தாக்ஷன், செந்தில் கணேஷ் என டைட்டிலை தட்டி சென்றவர்கள் பலர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பொருத்த வரையில், வெற்றியளர்கள் மட்டுமின்றி, திறமைசாலிகள் அனைவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிட்டி வருகின்றது.மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பென்னி தயால், பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், மெலடி குயின் அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி சுவேதா மோகன் பங்கேற்கின்றனர். முற்றிலும் புதுமையான இசை தேடலாக இருக்கப்போகிறது. மேலும் இந்த சீசனில் பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கிறது, தவறாமல் பாருங்கள்.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.