ஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

விளம்பரங்கள்

விஜய் தொலைக்காட்சி – ஸ்டார்ட் மியூசிக்

விஜய் தொலைக்காட்சி இதுவரை புதுமையான நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டுவருகின்றது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது இது வரும் மே 26 அன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது நம் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலகலப்பான நான்கு சுற்றுகளுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு நட்சத்திர டீம்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெறும் அணியிலிருந்து ஒருவர் லக்கி ரூமிற்க்கு செல்வார். உள்ளே செல்லும் போட்டியாளருக்கு, 4 போடியத்தில் எவ்வளவு ரூபாய் இருக்கிறது என்பது தெரியாது.

விளம்பரங்கள்
ஸ்டார்ட் மியூசிக்
ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு

பிற போட்டியாளர்கள் அவரை LEDயில் காண்பார்கள். ஒவ்வொரு சுற்றிற்கும் பரிசுத் தொகை அதிகரித்துக்கொண்டே போகும். நான்கு சுற்றின் முடிவில் எந்த அணி அதிக பரிசுத்தொகையுடன் உள்ளார்களோ அவர்களே அந்த வாரத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியில் ருபாய் ஒரு லட்சம் வரை வெற்றிபெறலாம்.

இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் பங்கேற்கப்போவது மகேஷ், பாலாஜி, ரேமா, சதிஷ், யோகி, ரக்ஷன், சேது மற்றும் க்ரேஸ் ஆவர். இந்த அட்டகாசமான கேம் ஷோவை தவறாமல் பாருங்கள்.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *