கிழக்கு வாசல் – ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், 07 ஆகஸ்ட் 2023 முதல் இரவு 10 மணி
ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், கிழக்கு வாசல்

07 ஆகஸ்ட் 2023 முதல் இரவு 10 மணி
ஸ்டார் விஜய், ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் துவங்குகிறது. இது ஒரு கண்கவர் குடும்ப கதை. இந்த நிகழ்ச்சி 07 ஆகஸ்ட் 2023 அன்று ஸ்டார் விஜய்யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். ரேணுகாவாக ரேஷ்மா, சாமியப்பனாக எஸ்.ஏ.சந்திரசேகர், சண்முகமாக வெங்கட் ரங்கநாதன், பார்வதியாக அஷ்வினி, தயாளனாக ஆனந்த் பாபு, அர்ஜூனாக தினேஷ் கோபாலசாமி, நடேசனாக அருண், மாயாவாக ரோஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கிழக்கு வாசல் கதை

இந்தக்கதை சாமியப்பன் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. சாமியப்பனின் வளர்ப்பு மகள் ரேணுகா. ரேணுகா ஒரு அன்பான சுறுசுறுப்பான பெண், அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள் மற்றும் பெரிய குடும்பம் கொண்ட தனது முழு குடும்பத்தையும் அன்பாகவும் அரவணைப்பாகவும் வைப்பதில் கவனமாக இருப்பாள். குடும்பத்தில் சவால்கள் மற்றும் பிரிவினைகள் ஏற்பட்டாலும் தன்னால் முடிந்த அளவு ஒற்றுமையாக இருக்க பாடுபடுவாள். ரேணுகா தனது சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், தான் ஒரு வழக்கறிஞராக பட்டப்படிப்பை படிக்க ஆசைப்படுகிறாரள் . இதன் மூலம் அவளுக்குத் துணையாக நிற்கிறார் அவளது தந்தை சாமியப்பன். அர்ஜுன் மற்றும் சண்முகம் இரண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், அவர்கள் அவளிடம் அன்பையும் பாசத்தையும் கொண்டுள்ளனர். கதை பல சுவையான திருப்பங்களைக் கொண்டுள்ளது மற்றும் பார்வையாளர்களை ஒவ்வொரு நாளும் இதன் கதையில் ஒன்றிவிடுவார் என்றால் மிகையாகாது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காணாதவறாதீர்கள்.