வகைகள்: விஜய் டிவி

ரெடி ஸ்டெடி போ சீசன் 2 – விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சில்

விளம்பரங்கள்

ரெடி ஸ்டெடி போ சீசன் 2

விஜய் தொலைக்காட்சி

விஜய் தொலைக்காட்சி மறுபடியும் இந்த விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ சீசன் 2 தொடங்கியுள்ளது. இது ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் என்ன புதிது என்றால், இதன் சுற்றுகள் எல்லாம் புதிது மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ளப்போவது பெண் போட்டியாளர்களே. ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ தான் இந்த ரெடி ஸ்டெடி போ சீசன் 2.

Ready Steady Po Season 2

எல்லா எபிசோடிலும் இரு அணிகளாக கலந்துகொள்வார்கள். ஒரு அணிக்கு மூன்று பெண்கள் என இவர்களுக்கு விளையாட்டான டாஸ்குகள் தரப்படும். இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் எண்டெர்டைனிங் சுற்றுகள் மற்றும்தான்.
மொத்தம் நான்கு எக்சைட்டிங் சுற்றுகள் உள்ளன. மூன்றாவது சுற்றின் முடிவில் எந்த அணி அதிகமான சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளார்களோ அவர்கள் நான்காவது சுற்றுக்கு தேர்வு செய்ய படுவார்கள். நான்காவது சுற்றில் இவர்கள் நமது தொகுப்பாளர்கள் அல்லது தோல்வியான எதிர் அணியுடன் விளையாடுவார்கள் அடுத்த கேள்வி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்பது தான்.

விளம்பரங்கள்
ஹாட் ஸ்டார் விண்ணப்ப பதிவிறக்கம்

Online Videos at Hotstar Application

இந்த தொகுத்து வழங்கப்போகும் தொகுப்பாளர்கள் வேறுயாருமல்ல எல்லாருக்கும் பிடித்த காம்போவான ரியோ மற்றும் ஆண்ட்ரூஸ் ஆவர்.இதில் ரியோ அவர்கள் தன் திரைப்பட வாய்ப்பில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் மேலும் நமது ஜோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இவருடன் தொகுத்து வழங்கவிருக்கும் ஆண்ட்ரூஸ்- சகல ரகள நிகழ்ச்சிக்கு பிறகு இவருடன் இணைந்து தொகுக்கவிருக்கிறார்.

தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கின் உச்சகட்டமாக இருக்க போகிறது இந்த நிகழ்ச்சி. எல்லா ஞாயிற்றுக்கிழமையும் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Share
தமிழ் சேனல் செய்திகள்