பல திருப்பங்களுடன் சரவணன் மீனாட்சி தொடர்
சரவணன் மீனாட்சி தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர் என்பதை அனைவரும் அறிவோம். ஆயிரம் அத்யாயங்களை கடந்த இந்த தொடர், இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த கதையில் வரும் திருப்பங்களும் கதாபாத்திரங்களும் இந்த தொடரின் மிக பெரிய பலம். அதனால் தான் இன்னும் இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.இந்த தொடரில் வரும் ரியோ மற்றும் ரட்சித்தா இருவருமே சரவணன் மீனாட்சியாக வெற்றிகரமாக சித்தரித்து வருகின்றனர். அமானுஷ்யம் நிறைந்த சமீப ப்ரோமோக்கள் நேயர்கள் மத்தியில் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், மேலும் எதிர்பாராத பல திருப்பங்களுடன் மிக சுவாரசியமாக இருக்க போகிறது இந்த வாரம்.
பல அமானுஷ்ய விஷயங்கள் மற்றும் மீனாட்சியின் நடவடிக்கை காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் மீனாட்சிக்கு தான் பேய் பிடித்திருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் மீனாட்சிக்குள் ஏதும் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா அல்லது வேறு யாருக்குள் இருக்கிறது போன்ற பல கேள்விக்கான பதில் இந்த வாரம் எபிசோடில் உள்ளது.

தற்பொழுது, முற்றிலும் பல மாறுபட்ட திருப்பங்களுடன், விறுவிறுப்பாக செல்லும் சரவணன் மீனாட்சி தொடரை, திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8.30 மணி முதல் ஒளிபரப்பாகிறது.