பாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு
Monday to Friday 10 pm on STAR VIJAY – பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி ஒரு மாறுபட்ட தொடர் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த தொடர் கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர் இவர். தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்வார்.

Story
தற்பொழுது இந்த தொடர் கதையில் நடத்தவிடாமல் செய்ய மீனாவின் தந்தை ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்சுக்கு வரவேண்டிய மளிகை சாமான்களை அனுப்பாமல் தடுக்கிறார் சொந்த பிரச்னையின் காரணமாக. அதையும் மீறி அவர்கள் கடைக்கான சாமான்களை வெளியிலிருந்து கொண்டு வருகின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸை செயல்படுத்த. கடையில் உள்ள அத்தனை சாமான்களையும் வாங்கி அவர்களை மேலும் சிக்கலில் மாட்டி விட பார்க்கிறார். அத்தனை பிரச்சனைகளுக்க்கிடையே செய்லபடுமா?
Cast and Crew

இந்த தொடரில் மூத்த அண்ணனாக நடிக்கிறார் தொலைக்காட்சி நடிகர் ஸ்டாலின் அவர்கள். இவர் சரவணன் மீனாட்சி என்னும் பிரபல தொடரின் புகழ். மேலும் தனலட்சுமியாக நடிக்கிறார் தொலைக்காட்சி நடிகை சுஜிதா அவர்கள். இவர் சமீபத்தில் Mrs. சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார். மேலும் இந்த தொடரில் தொலைக்காட்சி நடிகர் வெங்கட் தெய்வம் தந்த வீடு புகழ் , ஜோடி புகழ் குமரன், சரவணன் மீனாட்சி புகழ் சித்ரா ஆகியோர் இந்த தொடரில் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இந்த தொடர் முற்றிலும் ஒரு குடும்ப கதையாக அமையும், தவறாமல் பாருங்கள்.
Contents