Nalam Tharum Navrathri

நலம் தரும் நவராத்திரி என்ற முற்றிலும் புதிய மினி-தொடர் வழியாக கலர்ஸ் தமிழ்

விளம்பரங்கள்

நவராத்திரியின் குதூகல கொண்டாட்டத்தை உயிரோட்டமாக வழங்கும் கலர்ஸ் தமிழ்

நலம் தரும் நவராத்திரி
Nalam Tharum NavrathriNalam Tharum Navrathri

பண்டிகை காலத்தின்போது நேர்மறையான உணர்வுகளையும், அர்த்தமுள்ள பொழுதுபோக்கின் மகிழ்ச்சியை பரப்பவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை, நலம் தரும் நவராத்திரி என்ற ஒரு முற்றிலும் புதிய மினி சீரிஸை அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் தனது பார்வையாளர்களை கலாச்சார ரீதியில் தொடர்ந்து பிணைப்பினை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாக இதை கலர்ஸ் தமிழ் மேற்கொள்கிறது.

தமிழ்நாட்டில் பெரிதும் மதித்து கொண்டாடப்படுகின்ற நவராத்திரி திருவிழாவின் 9 நாட்கள் காலஅளவின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியங்கள் குறித்து சிறப்பான, தெளிவான தகவலை பிரபல பேச்சாளரும், எழுத்தாளரமான மிஸ். சுமதி ஸ்ரீ பகிர்ந்துகொள்ளும் சிறப்பு தொடர் நிகழ்வாக இது இருக்கும்.  அக்டோபர் 17 முதல், 26 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகின்ற ஒவ்வொரு எபிசோடும், பெண் தெய்வமான தேவியின் ஒன்பது அவதார வடிவங்கள் பற்றி சுவாரஸ்யமான புதினங்களை எடுத்துச்சொல்வதன் மூலம் இந்த தெய்வீக பயணத்தில் பார்வையாளர்களை பக்தியோடு அழைத்துச் செல்லும்.

இசை, ஒளிவிளக்குகள் மற்றும் வண்ணங்களின் இனிய கலவையாக திகழும் நவராத்திரி என்பது, தென்னிந்தியாவில் மிக முக்கியமான திருவிழாக்களுள் ஒன்றாகும். அழகான பொம்மைகளின் அற்புதமான காட்சிப்படுத்தலான கொலு என்பது, இந்த மகிழ்ச்சிகரமான பக்தி நிறைந்த விழாவின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாகும். கலர்ஸ் தமிழால் புதிதாக ஒளிபரப்பப்படும் இந்த மினி தொடர், அதன் 10 எபிசோடுகளிலும் இந்த கொண்டாட்டத்தின் உண்மையான சாரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.

கொண்டாட்டத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடிலும், பார்வையாளர்களின் முழுகவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த கொண்டாட்டத்தோடு தொடர்புடைய பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று பின்னணி பற்றி பல்வேறு பயனுள்ள தகவல்களை மிஸ். சுமதி ஸ்ரீ பகிர்ந்துகொள்கிறார். ஒரு அறிமுகத்தோடு தொடங்கும் இந்த எபிசோடுகள், ஒவ்வொரு நாளின் நிறம், மலர்கள், பிரார்த்தனைகள், பிரசாதங்கள் மற்றும் இசை ராகங்கள் என தேவியின் ஒவ்வொரு வடிவத்திற்கும் பிரத்யேகமான அம்சங்களுக்கு பின்னணியில் உள்ள தொன்மங்கள் மற்றும் பாரம்பரியங்களை விரிவாக விளக்கிக்கூறுவதாக இருக்கும்.

முன்னிலைப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையையும் மற்றும் சமயப்பற்றையும் இன்னும் உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாகவும் இது இருக்கிறது. இந்த தெய்வீக அனுபவமானது, எமது ரசிகர்களுக்கு நேர்மறையான உணர்வையும், நம்பிக்கையையும் இன்னும் அதிகமாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

விளம்பரங்கள்

முதல் ஒன்பது நாட்களின்போது, தேவியின் ஒன்பது வடிவங்களின் முக்கியத்துவம் மற்றும் வழிபடும் முறைகள் பற்றி விளக்கி ஒரு அழகான ஆன்மீக அனுபவத்தில் இந்த தொடரானது, பார்வையாளர்களை அழைத்துச்செல்லும். நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் பின்பற்றப்படும் பல்வேறு சடங்குகளையும் இது பின்பற்றும்.

இத்தொடரின் இறுதி எபியோடு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் ஆலயம் பற்றிய செய்திகளை தாங்கி வரும் மற்றும் இத்திருக்கோயிலில கொண்டாடப்படும் மிகப்பிரமாண்டமான நவராத்திரி கொண்டாட்டங்கள் பற்றிய சிறப்பு பார்வையை ரசிகர்களுக்கு வழங்கும். இவைகளோடு சேர்த்து, தமிழ்நாடெங்கும் தேவிக்கு அமைந்திருக்கின்ற முக்கியமான திருக்கோவில்கள் மற்றும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது அங்கு மேற்கொள்ளப்படும் பிரத்யேக பாரம்பரிய நடைமுறைகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களையும் எடுத்தியம்பும்.

பேரானந்த அனுபவத்தைப் பெற நலம்தரும் நவராத்திரி நிகழ்ச்சியை காண்பதற்கு அக்டோபர் 17 ஆம் தேதி, சனிக்கிழமை முதல், 2020 அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை வரை காலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *