Mr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி – Mr and Mrs. சின்னத்திரை

Mr and Mrs. சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமை, காதல், அன்பு என்பதை இந்த நிகழ்ச்சியில் தான் காண்போம். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள் காதல் மன உறுதி வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுறை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான்.

இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் புகழ் விஜயலக்ஷ்மி பிரபல நடிகை தேவதர்ஷினி மற்றும் தொகுப்பாளர் கோபிநாத் நடுவர்களாக பங்கேற்கின்றனர்மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நேயர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று யார் அந்த டைட்டிலை தக்கவைத்துக்கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ள நிகழ்ச்சியை வாரந்தோறும் தவறாமல் காணுங்கள்.
