Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று – 19th May 2019 at 3.00 P.M
Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று

விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs. சின்னத்திரை.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமை, காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்கள் மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி. இந்த இறுதிச்சுற்றில் இரண்டு சூற்றுகளிருக்கும், அதில் போட்டியாளர்கள் தங்களது பெஸ்டை கொடுக்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் புகழ் விஜயலக்ஷ்மி பிரபல நடிகை தேவதர்ஷினி மற்றும் தொகுப்பாளர் கோபிநாத் நடுவர்களாக பங்கேற்றனர். தற்பொழுது இந்த இறுதிச்சுற்றில் நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் கோபி அவர்கள் வெற்றியாளர்களை அறிவித்து முடிசூட்டவுள்ளனர்.
மேலும் இவர்களை ஊக்குவிக்க நமது விஜய் நட்சத்திரங்கள் வருகை தருகின்றனர்
