மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 – ஸ்டார் விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி

விளம்பரங்கள்

ஏப்ரல் 24 முதல்; சனி – ஞாயிறு மாலை 6.30 மணிக்கு – மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3

Mr and Mrs Chinnathirai Season 3
Mr and Mrs Chinnathirai Season 3

ஸ்டார் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி நேயர்களிடையே மிகவும் பிரபலம்வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். இதன் மூன்றாவது சீன் வரும் ஏப்ரல் 24ம் தேதி சனி அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை யில் சின்னச்சித்தரை பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஜோடியாக பங்கேற்கப்போகிறார்கள். இந்த சீசனிலும் நேயர்களை கவரும் ஏராளமான போட்டிகள், நடனம் என்று நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தம்பதிகளின் மனம் மற்றும் அவரவர் துணையை புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விளம்பரங்கள்

பின்வரும் பிரபலங்கள் ராஜ்மோகன் & கவீதா, கோபாலகிருஷ்ணன் & ஹரிதா, சங்கர் & தீபா, யுவராஜ் & காயத்ரி, வேல்முருகன் & கலா, வினோத்குமார் & ஐஸ்வர்யா, சரத்குமார் & கிருத்திகா, யோகேஷ் & நந்தினி, மணிகண்டன் & சோபியா, திவாகர் & அபினயா, ஜாக் & ரோஷினி, அஜய் குமார் & ஆனந்தி ஆகியோர் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்கள் நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி. ஏப்ரல் 24 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படுவதை விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்.

You might also like

Leave A Reply

You email id will not publish to public