விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் லண்டன்

Advertisement

உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் லண்டனில் விஜய் தொலைக்காட்சியின் விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. லண்டனில் மிக பிரபலமான எவன்டிம் அப்பல்லோவில் நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 18 அன்று, ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நமது சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் சௌந்தர்யா, ஸ்ரீனிவாஸ், திவாகர், மாளவிகா, பிரகதி மற்றும் சத்யா பிரகாஷ் ஆகியோரின் இசை விருந்தை தவறாமல் விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை பாருங்கள்.மேலும் அனைவருக்கும் மிகவும் விருப்பமான தொலைக்காட்சி ஜோடி, ராஜா ராணி தொடரின் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இந்த ரீல் ஜோடி நடனத்தில் தேர்ந்தவர்கள் என்று அனைவருக்கும் தெரியும் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் மறுபடியும் பிரமாண்டமாக நடனமாடி அசத்தியுள்ளனர்.

Advertisement

நமது பிக் பாஸ் குடும்பத்திலிருந்து ஹரிஷ் கல்யாண், ஆரவ் மற்றும் பிந்து மாதவி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அனைவரின் அசத்தல் நடனத்தை தவறாமல் பாருங்கள். முக்கியமாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவர்களுடன் இணைந்து இவர்கள் ஆடும் நடனத்தை காணாதவறாதீர்கள். மேலும், நமக்கு அபிமான தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இவர்கள் மட்டுமல்ல சரவணன் மீனாட்சி புகழ் ரட்சித்தா அவர்களும் இந்த நிகழ்ச்சியில் ஒரு அசத்தல் நடனத்தை ஆடி மகிழ்விப்பார்.இப்படி பல ஆச்சரியங்கள் மற்றும் நமது விஜய் நட்சத்திரங்களின் மகிழ்ச்சியூட்டும் பெர்பாமன்சுகளையும் காணத்தயாராகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு, உங்கள் விஜயில்.

Advertisement
You might also like

Leave A Reply

You email id will not publish to public