கல்யாணமாம் கல்யாணம் – விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய தொடர்
கல்யாணமாம் கல்யாணம்
விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய தொடர் கல்யாணமாம் கல்யாணம், விரைவில் தொடங்கவிருக்கிறது. இது வரும் ஜனவரி 29 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கமலி என்னும் சாதாரண குடும்பத்து பெண் தான் இந்த கதையின் நாயகி. வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். கல்யாணம் மற்றும் சடங்குகளை மிகவும் நம்பும் அன்பான பெண் இவர். மற்றொரு பக்கம் நமது ஹீரோ பணக்கார வீட்டு பையன், மற்றும் கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவர் தான் சூர்யா. தனது அப்பா அம்மா இருபது வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர.
கதைச்சுருக்கம்
சூர்யாவின் தாத்தா, கமலியின் எளிமை குணத்தை மிகவும் விரும்புகிறார், கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாத தனது பேரன் சூர்யாவுடன் இவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். இவர்களுக்கு இடையே திருமணம் நடக்குமா? காதல் மலருமா?

இந்த கதையில் கமலியாக ஸ்ரீத்து நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர்கதையான 7c தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த தொடரில் சூர்யாவாக தேஜா நடிக்கிறார். கமலி என்னும் சாதாரண குடும்பத்து பெண் தான் இந்த கதையின் நாயகி. வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்.
நடிகர்கள்
ஸ்ரீது – கமலி (சூர்யாவின் மனைவி)
தேஜா – சூர்யா (கமலியின் கணவன்)
ஸ்ரிதிகா – அகிலா (சூர்யாவின் தாய்)
மௌலி – சிவப்பிரகாசம் (அகிலாவின் தந்தை, சூர்யாவின் தாத்தா)
ஆர். சுந்தர்ராஜன் (கமலியின் தாத்தா)
ஜீவா ரவி
ஷாப்பினம் – பிரியா
சாய் பிரியங்கா – சந்தியா (சிவபிரகாசத்தின் மகள், அகிலாவின் சகோதரி)
ஜீவிதா – நிர்மலா ஜெகதீஷ்
ரவிக்குமார்
கல்யாணம் மற்றும் சடங்குகளை மிகவும் நம்பும் அன்பான பெண் இவர். மற்றொரு பக்கம் நமது ஹீரோ பணக்கார வீட்டு பையன், மற்றும் கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவர் தான் சூர்யா. மேலும் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மௌலி அவர்கள் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடித்த பிரபல திரைப்படங்கள் பிஸ்தா, டைம் ஆகியவை நம் மனதில் நீங்காதவை.
தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர். சுந்தராஜன் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடரை இயக்குகிறார் இயக்குனர் பிரம்மா அவர்கள். இந்த புத்தம் புதிய குடும்ப காவிய தொடரை காணத்தவறாதீர்கள்.
Contents