இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக வெற்றிநடைபோடும் நிலையில், ஒரு மாபெரும் திருமணம் இதில் இப்போது இடம்பெறவிருக்கிறது. இத்திருமண நிகழ்வுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் வகையில் இதயத்தை திருடாதேயின் இந்த சிறப்பு எபிசோட்-ல் அதன் மனம் கவர்ந்த ஜோடி ஷிவா-சஹானா ஆகியோருடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் மாங்கல்ய சந்தோஷம் என்ற இதன் பிற பிரபல நெடுந்தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்கின்றனர்.
ஒரே நிகழ்ச்சியில், மக்களின் அபிமானம் பெற்ற இந்த இளம் ஜோடிகள் பங்கேற்பது இதனை ஒரு மறக்கமுடியாத தருணமாக மாற்றுவது நிச்சயம். ஏப்ரல் 19 அன்று இரவு 7:00 மணி முதல் 9:30 மணிவரை ஒளிபரப்பப்படவுள்ள இந்த மாபெரும் கொண்டாட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பவா லக்ஷ்மன் மற்றும் நடிகை வைசாலி தணிகா, இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இதயத்தை திருடாதேயின் சிறப்பு எபிசோட், ஷிவாவின் தங்கை ஐஸ்வர்யாவின் சிறப்பான திருமண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கிறது. எதிர்பாரா திருப்பங்கள், உணர்வுகளின் கொந்தளிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு என பல தொடர் நிகழ்வுகளாக இந்த திருமணம் அரங்கேறுகிறது. கலர்ஸ் தமிழின் பிரபல நெடுந்தொடர்களின் நடிகர்கள் பங்கேற்கும் துள்ளலான நடனங்கள் இதனை பார்க்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத இனிய அனுபவமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.