இதயத்தை திருடாதே சிறப்பு எபிசோடுகளுடன் – அக்டோபர் 24 முதல் 28 வரை இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ்
இதயத்தை திருடாதே; தனக்கே உரித்தான பாணியுடன் நகைச்சுவையை வாரி வழங்கி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்

இதயத்தை திருடாதே என்ற பெயரில் குதூகலம் நிறைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கலர்ஸ் தமிழ் அதன் பார்வையாளர்களுக்கு வழங்கவிருப்பதால் இந்த சிறப்பான கேளிக்கை நிகழ்வை கண்டுகளிக்க தயாராகுங்கள். அக்டோபர் 24 சனிக்கிழமை முதல் தொடங்கி அக்டோபர் 28 புதன்கிழமை வரை நடைபெறுகின்ற இந்தவார எபிசோடுகளில் மகிழ்வூட்டும் துடிப்பான கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியும் இதில் உள்ளடங்கும். கலர்ஸ் தமிழின் இத்தகைய நிகழ்ச்சியில் முதன்முறையாக தோன்றுகின்ற பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வால் பார்வையாளர்களை பரவசப்படுத்துவது நிச்சயம். இவரது வரவால் நிகழ்ச்சியின் கொண்டாட்டங்கள் இன்னும் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.
தனது தனித்துவமான இந்நிகழ்ச்சி பற்றி பேசிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், “பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் தொடர்ந்து அங்கம்வகித்து வந்திருக்கிறேன். எனது திறமையை இந்த உலகம் கவனித்து கருத்தில்கொள்ளுமாறு செய்த செயல்தளம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான். எனினும், கலர்ஸ் தமிழின் ஒரு புனைவு நிகழ்ச்சியில் இதுவே எனது முதல் அறிமுகமாகும். இதயத்தை திருடாதே நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் உள்ளபடியே மற்றற்ற உற்சாகமும், மகிழ்ச்சியும் எனக்கிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எனது பங்கானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு கலகலப்பை கொண்டு வருவதன் மூலம் புத்துணர்வூட்டும் திருப்பத்தை நான் வழங்குகிறேன். உண்மையிலேயே இது எனக்கு ஒரு குதூகலமான அனுபவமாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்காக நடித்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததைப்போலவே எனது நடிப்பையும் பார்வையாளர்கள் அதே அளவிற்கு மகிழ்ந்து கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.
ரோபோ சங்கரின் சிறப்பு தோற்றம் மட்டுமன்றி, பல்வேறு கொண்டாட்டங்களின் தொகுப்பையும் உள்ளடக்கியதாக இந்நிகழ்ச்சி இருக்கிறது. மிகப்பெரிய குழு அமைப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜை சடங்குகள், இந்த நவராத்திரி திருவிழாவின் முக்கிய அம்சங்களையும், வரலாற்று பின்னணியையும் நினைவுப்படுத்துவதாக இருக்கும். மட்டற்ற பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த எபிசோடு, ரோபோ சங்கருடன் இணைந்து பார்ப்பவர்களையும் எழுந்து நடனமாடச் செய்யும் தாண்டியா தாள நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.