விஜய் தொலைக்காட்சியில் ஜோடி Fun Unlimited இறுதிச்சுற்று
நடன விரும்பிகள் மட்டும்மல்ல , அனைவருக்கும் பிடித்த மிக பிரபலமான நடன நிகழ்ச்சி ஜோடி. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுகிறது. இந்த சீசன் ஜோடி Fun unlimited, இறுதி சுற்றை நெருங்கிவிட்டது.

இந்த சீசன் ஜோடியில் நடிகை யாஷிகா ஆனந்த், தொகுப்பாளினி DD, நடிகர் மஹத், தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், ஆகிய டீம் லீடர்களின் மதிப்பெண்கள் மற்றும் 200 பார்வையாளர்கள் நடுவர்களாக இடும் மதிப்பெண்கள் வைத்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதுவரை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் காணாத சில அறிய நடன படைப்புகளை இந்த நிகழ்ச்சியில் ஜோடிகள் பெர்ஃபார்ம் செய்தனர். ஒவ்வொறு சுற்றிலும் ஜோடிகள் தங்கள் தனித்துவமான ஸ்டைலை காட்டும் வகையில் பல்வேறு வகையான நடனங்களை காண்பித்தனர்.

அத்தனை சுற்றுகளிலும் தங்களது பெஸ்டை குடுத்து இறுதிச்சுற்றுக்கு தேர்வான அந்த சிறந்த ஜோடிகள் ராமர்- ரஹீமா, அஜீம் – ஷிவானி, குமரன்- சித்ரா அதிஷ்- உத்ரா, லோகேஷ்- மேக்னா, அணிலா – பிரிட்டோ மற்றும் ஸ்ரீது- விஷால்.
இந்த இறுதிச்சுற்று வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 13 அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு போட்டியாளரின் தொடர்கதை குடும்பம் வருகைதந்து அவர்களை உற்சாக படுத்திக்கொண்டிருப்பர். மேலும் எல்லோருக்கும் பிடித்த ஒரு தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் கடந்த 20 வருடங்களாக வெற்றிகரமாக, விஜய் தொலைக்காட்சியில் தொகுத்துவரும் செல்ல தொகுப்பாளினி DD அவர்களை பெருமை படுத்தப்போகிறார்கள். அந்த அழகிய தருணத்தை காணத்தவறாதீர்கள்.

இந்த பிரமாண்ட இறுதி சுற்றில் மேலும் பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. அரங்கை அதிரவைக்கும் நடனங்களை அரங்கேற்ற வருகின்றனர் பல நடனக் கலைஞர்கள். அனைவருக்கும் பிடித்த நம் டீம் லீடர்ஸ் மற்றும் தொகுப்பாளர்கள் சிறப்பான பெர்பார்மன்ஸ் தரவுள்ளார். மேலும் திரையுலகில் இருக்கும் பல நடன கலைஞர்கள் வருகை தரவுள்ளனர். மேலும் பல சுவாரிஸ்யங்களுடன் காத்துக்கொண்டிருக்கிறது ஜோடி இறுதிச்சுற்று காணத்தவறாதீர்கள்.