விஜய் தொலைக்காட்சியின் புத்தம் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி- என்கிட்ட மோதாதே. இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவ ுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அவளும் நானும் மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப்போகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என பொழுதுபோக்கில் மொத்த அங்கங்களும் இருக்கப்போகின்றது.இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி முழுக்க முழுக்க பொழுதுபோக்கும் நகைச்சுவையும் கலந் . தபோட்டியாக இருக்கும்.இந்த கலகலப்பான விஜய் நட்சத்திரங்களை கொண்டு நடக்கப்போகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் தொலைக்காட்சியின் செல்ல தொகுப்பாளினி DD அவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் மேலும் பல சுவாரசிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதனால் இனி தவறாமல் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் இரண்டு நகைச்சுவை நட்சத்திரங்கள் வந்து இவர்களுடன் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மேலும் குதூகலப்படுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் ராஜா ராணி மற்றும் பொன்மகள் வந்தால் குடும்பத்தினர் போட்டியிடவுள்ளனர்.
இப்படி நமக்கு விருப்பமான தொடர்களின் நட்சத்திரங்களோடு பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது இந்த என்கிட்ட மோதாதே, தவறாமல் பாருங்கள்!