விஜய் தொலைக்காட்சி நேயர்களுக்கு விஜய் தொலைக்காட்சியின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள். எந்த ஒரு பண்டிகை நாளும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி இல்லாமல் நிறைவடையாது. பண்டிகையின் நோக்கம் தனிமனித மகிழ்ச்சியா? அல்லது சமூகத்தின் மகிழ்ச்சியா? என்று சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் அளவிற்கு ஒரு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடுவர் சுகி சிவம் தலைமையில் நிகழ்கிறது. இந்த நிகழ்ச்சியை காலை 9 மணிக்கு காணுங்கள்.
தீபாவளி நாளின் சிறப்பு திரைப்படமாக மாநகரம் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. இது ஒரு சூப்பர் ஹிட் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஆகும். முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீ , நடிகை ரெஜினா காசன்ட்ரா , நடிகர் சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
உங்களுக்கு மிகவும் பிடித்த விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை இந்த முறை மிஸ் செய்யாதீர்கள். ஆலியா மானசா, சஞ்சீவ், ரியோ, ப்ரஜன், மீனா நந்தினி, சுனிதா, மணி மற்றும் பெலினா என்று பல நட்சத்திர பட்டாளமே வந்து தீபாவளி நாளை மகிழ்ச்சியூட்ட வருகின்றனர். அதிரடி நடனம், இசை என உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியை உண்டாக வருகின்றனர். விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை மதியம் 1 மணிக்கு காணுங்கள்.
ஹேண்ட்சம் ஹீரோ கார்த்தி அவர்களுடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சி எங்கள் தோழன் கார்த்தி. இந்த நிகழ்ச்சியில் நம் இதுவரை கண்டிராத நடிகர் கார்த்தியாக இன்னும் கலகலப்பாக நம்முடன் உரையாட வருகிறார். தொகுப்பாளினி ரம்யா தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியை மாலை 3.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
நம் விஜய் குடும்பத்தை சேர்ந்த புது மன தம்பதிகளோடு கொண்டாடும் நிகழ்ச்சி தல தீபாவளி SPL சிறப்பு நிகழ்ச்சி. இதில் விஜய் தொலைக்காட்சியின் ஜோடிகள் ரியோ சுருதி , சூப்பர் சிங்கர் புகழ் சத்யா பிரகாஷ் மற்றும் அவர் மனைவி , சிரிச்சா போச்சு தங்கதுரை மற்றும் அவர் மனைவி என இவர்களோடு கலகலப்பான ஒரு கொண்டாட்டம் தான் இந்த நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
இந்தியாவின் மிக பெரிய ப்ளாக்பஸ்டர் திரைப்படமான பாகுபலி திரைப்படத்தை இந்த தீபாவளி நாளன்று மகிழ்ந்து காணுங்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஹிந்தி, மலையாளம், பிரெஞ்சு, ஜாப்பனீஸ் என பல மொழிகளில் மொழி பெயர்க்க பட்டு வெற்றிகரமாக ஓடியது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இத்திரைப்படத்தை மாலை 6 மணிக்கு காணத்தவறாதீர்கள். இப்படி விஜய் தொலைக்காட்சியின் மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளை கண்டு நேயர்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகட்டும்