குக் வித் கோமாளி சீசன் 2 – 14 நவம்பர் 2020 முதல் ஆரம்பமாகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் – ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி

விளம்பரங்கள்

நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத ஒரு குக்கரி ஷோ – குக் வித் கோமாளி சீசன் 2

Cooku With Comali 2
Cooku With Comali 2

STAR VIJAY நேயர்களின் அபிமான மற்றும் மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். நேயர்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். நகைச்சுவை கலாட்டாக்கள் நிறைந்த இந்த குக் வித் கோமாளி சீசன் 2 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு போட்டியாகும்.

வேடிக்கை, சிரிப்பு, குறும்பு மற்றும் திறமை ஆகியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கும், இது ஒரு புதிய பரிமாணத்தை தொலைக்காட்சி மூலம் நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. .

மிகவும் பிரபலமான திறமையான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக சமையலறையில் போட்டியிட உள்ளனர். சமையல் நடவடிக்கைகள் நேயர்களை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும். இந்த போட்டியாளர்களுக்கு உதவ சமையல் பற்றி எதுவும் அறிந்திராத உதவியாளர்கள் இவர்களுக்கு நிகழ்ச்சியில் உறுதுணையாக இருக்கப்போவதுதான் பெரும் நகைச்சுவை.

விளம்பரங்கள்

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் இடம்பெறுவர். கோமாளிகளில் பெரும்பாலானோர் முந்தைய சீசனில் இடம்பெற்றவர்கள். ரக்க்ஷன் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடருகிறார்.

நிகழ்ச்சியை நடுவர் செஃப் வெங்கடேஷ் பட். நவம்பர் 14, அன்று ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு STAR VIJAY ஒளிபரப்பப்படும். காணாதவறாதீர்கள்.ராஜா ராணி சீசன் 2

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *