பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் – உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

பார்த்து ரசித்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் – ஜனவரி 13 முதல் 17 வரை அற்புதமான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
Bhajan Samraat Ponkal Special

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஜனவரி 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒளிபரப்பாக உள்ளன. இந்த 5 நாட்களும் காலை பக்தி கமழும் பஜனை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதனைத் தொடர்ந்து நாவிற்கினிய பண்டிகை கால உணவு சமைப்பது உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த பண்டிகை காலத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியுடன் கொண்டாட தயாராகுங்கள். புத்தம் புதிய பக்தி ரியாலிட்டி ஷோ – பஜன் சாம்ராட் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களில் சிறந்த பாடகரை புகழ்பெற்ற கர்னாடக இசைக் கலைஞர்கள் ஆர். கணேஷ் மற்றும் மகதி ஆகியோர் தேர்வு செய்விருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கடம் உமா சங்கர், குடந்தை சரவணன் மற்றும் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று இந்த நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டவிருக்கிறார்கள்.

Devadarshini in Amman Serial
Devadarshini in Amman Serial

இதேபோன்று பிரபலமான சமையல் நிகழ்ச்சியான ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி 16-ந்தேதி சனிக்கிழமை மற்றும் 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மிகச் சிறந்த விருந்தால் உங்கள் பசியை போக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாவில் நீர் ஊறும் பண்டிகை கால சிறப்பு உணவுகளை போட்டியாளர்கள் சமைக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் தாமு தர்பார் பிரிவில் புகழ்பெற்ற சமையல்கலை நிபுணர் செப் தாமு பொங்கல் சிறப்பு உணவாக தேங்காய் பால் புலாவ் மற்றும் மசாலா டோஸ்டட் சாண்ட்விட்ச் ஆகிய உணவுகளை உங்களுக்காக சமைக்க உள்ளார். விஐபி வீட்டு சமையல் பிரிவில் நடிகை ரேகா சுரேஷ் மற்றும் அகிலா கிருஷ்ணன் ஆகியோர், உடைச்சகடலை வடை மற்றும் இட்லி மட்டன் சுக்கா ஆகிய தனித்துவமான உணவுகளை உங்களுக்காக சமைக்க உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ‘கில்லாடி குக்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கரும்பு சாறு பொங்கல் மற்றும் வாழை இலை இனிப்பு போன்றவற்றையும் செய்ய உள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு ஒரு ஆரோக்கியமான பண்டிகை கால விருந்து அளிக்க சுடச் சுட சமையல் பிரிவில் சமையல்கலை நிபுணர் ஸ்ரேயா அட்கா, வித்தியாசமான சுவைகளில் பைவ் டிரஷர்டு ரைஸ் மற்றும் குடமிளகாய் சீஸ் பால் ஆகியவற்றை தயாரிக்க உள்ளார்.

15ந்தேதி மாலை 7.30 மணிக்கு இத்தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற தொடரான நடிகை தேவதர்ஷினி நடிக்கும் ‘அம்மன்’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் உச்சமாக 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் மாலை 8.30 மணிக்கு நடிகை நான்சி ஜெனிபர் நடிக்கும் ‘இதயத்தை திருடாதே’ தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதைத் தொடர்ந்து இந்த தொலைக்காட்சியின் புத்தம் புதிய தொடரான ‘சில்லுனு ஒரு காதல்’ தொடர் ஒளிபரப்பாகும். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து 14 மற்றும் 15-ம் தேதிகளில் இரவு 9:30 மணிக்கு சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார். மேலும் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக 14 மற்றும் 15-ந்தேதி இரவு 10 மணிக்கு நாட்டுப்புற பாடகர் அந்தோனி தாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் இவர் பல நாட்டுப்புற பாடல்களை பாடி உங்களை மேலும் உற்சாகப்படுத்த இருக்கிறார்.

எனவே, இந்த பொங்கல் பண்டிகையை உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; ஜனவரி 13 முதல் 17 வரை அற்புதமான நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.

You might also like

Leave A Reply

You email id will not publish to public