Colors Tamil Mahashivrathri

மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நேரலையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!

விளம்பரங்கள்
Colors Tamil Mahashivrathri
Colors Tamil Mahashivrathri

இந்தியாவில் மக்களால் பெரிதும் அனுசரிக்கப்படும் புனித திருவிழாவான மஹாசிவராத்திரி, பக்தர்களுக்கு ஒரு அற்புதமான தெய்வீக அனுபவத்தை உண்மையிலேயே வழங்குகிறது. சிவபெருமானின் புகழ்மாலையை உச்சரிப்பதில் தொடங்கி, இரவு முழுவதும் பிரார்த்தனைகளையும், பஜனை பாடல்களையும் பாடி நடத்தப்படும் வழிபாடு இலட்சக்கணக்கான வீடுகளில் பக்தி பரவத்தை, நேர்மறை உணர்வையும் பரப்புகிறது.

இக்கொண்டாட்டத்தை இந்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் உயர்த்தும் நோக்கத்தோடு, ஈஷா யோகா அமைப்புடன் இணைந்து, கலர்ஸ் தமிழ், மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை பிரத்யேகமாக நேரலையில் ஒளிபரப்பவிருக்கிறது. 2021 மார்ச் 11, வியாழனன்று இரவு 11:30 மணியிலிருந்து மஹாசிவாரத்திரி கொண்டாட்டம் 2021 – ஐ கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் கண்டு தெய்வீக பரவசத்தைப் பெறலாம். அற்புதமான நடனங்கள், இசைப்பாடல்கள் மற்றும் விளக்கவுரையுடன் ஆதி யோகி திவ்யதரிசனம் என்ற மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியை கண்டு பயனடையலாம். இந்த சிறப்பு நேரலை ஒளிபரப்பில் நீங்கள் பார்க்கக்கூடிய நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன:

மனதிற்கு பரவசமூட்டும் இசை நிகழ்ச்சிகள்: மஹாசிவராத்திரி கொண்டாட்டம், கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் சிறப்பான சங்கமமாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் சிவபெருமானின் புகழைப்பாடுவதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மாலையில் தொடங்கி, இரவு முழுவதும் நடைபெறுகின்ற இந்த நிகழ்விற்கு கற்பனைக்கு எட்டாத அளவு சக்தியையும், உற்சாகத்தையும் சேர்த்து வழங்கும் வகையில் கபிர் கஃபே, குட்லே கான் புராஜெக்ட், சந்தீப் நாராயண், மாங்குலி, பார்திவ் கோஹில், அந்தோணி தான் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா ஆகிய குழுக்கள் இதில் பங்கேற்று, இசை நிகழ்ச்சிகளை தெய்வீக மணத்துடன் வழங்குகின்றனர். இவற்றுடன் சேர்த்து ஈஷா சம்ஸ்க்ருதியின் மாணவர்கள், மெய்மறக்கச் செய்யும் நடன நிகழ்ச்சிகளின் வழியாக இந்த இரவுப் பொழுதை ஆனந்தமயமாக ஆக்குவார்கள் என்பது நிச்சயம்.

விளம்பரங்கள்

ஆன்மீக விழிப்பு: இந்த நேரலை ஒளிபரப்பு, இரவு முழுவதும் நீடிக்கின்ற ஒரு ஆன்மீக அனுபவத்தை தங்களையே முழுமையாக அமிழ்த்திக்கொள்ளக்கூடிய ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்கும். இந்த புனித இரவு பொழுதில், மனித அமைப்பில் ஆற்றலின் ஒரு இயற்கையான உயர்வை உருவாக்குவதற்காக கிரக நிலைகள் மாறுகின்றன. இந்நேரத்தின்போது உறங்காமல் விழித்திருப்பது ஒருவரது உடல்சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த நலத்தை இன்னும் வலுவாக்க உதவுகிறது.

யோகாவின் மூலத்தோற்றம்: இக்கொண்டாட்டத்திற்கு ஒரு வியப்பூட்டும் அம்சத்தை சேர்க்கும் வகையில் யோகாவின் தோற்றம் பற்றி ஒரு கண்ணோட்டத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகின்ற ஒரு ஒளி ஒலி காட்சி, சிறப்பு ஒளிபரப்பாக இடம்பெறும். இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விருது வென்ற மாபெரும் ஆதியோகியின் புனித உருவச்சிலை மீதான அழகான திவ்யதரிசன நிகழ்வும் சிறப்பு ஒளிபரப்பில் இடம்பெறும்.

இயற்கையான கிரக நிலைகளின் காரணமாக அளவற்ற ஆன்மீக ஆதாயங்களை வழங்குவதன் காரணமாகவே மஹா சிவராத்திரி இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. உங்கள் இல்லத்தில் வசதியாக இருந்தபடியே மார்ச் 11 வியாழன் இரவு 11:30 மணியிலிருந்து, மார்ச் 12 வெள்ளி காலை 5:30 மணி வரை கலர்ஸ் தமிழ் அலைவரிசையை காண்பதன் மூலம் புனிதமான இந்த கொண்டாட்டத்தில் இணைய மறந்துவிடாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *