சிந்தனைகள் சிம்ப்ளிபைடு – அக்டோபர் 4, காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது

விளம்பரங்கள்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு

சிந்தனைகள் சிம்ப்ளிபைடு
Sinthanaigal Simplified Colors Tamil

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’ என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாடி வருகின்றனர். இந்த வாரம் அக்டோபர் 4, ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் கலந்து கொண்டு சிரிப்பு – ஆன்மீகம் பற்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாட இருக்கிறார். முற்றிலும் நகைச்சுவை நிறைந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

சிந்தனைகள் சிம்ப்ளிபைடு நிகழ்ச்சியை பார்ப்பதற்கான 3 முக்கிய காரணங்கள் வருமாறு:-

சிரிப்பு ஒரு டானிக்: சிரிப்பு என்பது மனிதனுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். சிரிப்பு மனிதனின் கவலை போக்கக்கூடியது என்றும், ஒருவர் விரும்பும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சிரிக்கலாம். இதன் மூலம் அவருக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்று குருதேவ் உறுதியளிக்கிறார். இந்த கலந்துரையாடலில் கேமராவிற்கு வெளியே பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும் நடிப்பு என்று வந்தவுடன் ரசிகர்களை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகரை பற்றி குருஜியின் கருத்து என்ன என்று சதீஷ் கேட்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கும் பலர் சினிமாவில் நகைச்சுவை மூலம் பிரபலமடைந்துள்ளனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை கூறி குருஜி அற்புதமாக பதில் அளிக்கிறார்.

Gurudev and Sathish
Gurudev and Sathish

மூடநம்பிக்கை பற்றிய உண்மை : மக்களின் மூடநம்பிக்கைகள் குறித்த அடுத்த கேள்வியை குருதேவிடம் முன்வைக்கிறார் நடிகர் சதீஷ். குருதேவ் அது குறித்து பல்வேறு சம்பவங்களை கூறுகிறார். தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். மூட நம்பிக்கைகளானது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது என்றும் ஒவ்வொரு விஷயத்திலும் இது ஒரு தனித்துவமான பொருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

விளம்பரங்கள்

புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தி: அடுத்து புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தி பற்றிய கேள்வியை குருஜியிடம் முன் வைக்கிறார் சதீஷ். எதிர்காலத்தை முன்னரே அறியக்கூடிய நபர்களுடனான தனது சந்திப்புகளை பற்றி அவர் குருஜியுடன் பகிர்ந்துகொள்கிறார், மேலும் இந்த சிறப்பியல்பு உணர்வுகளை அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள் என்பது குறித்தும் அவர் ஆச்சரியப்படுகிறார். இதற்கு குருஜி பதிலளிக்கையில், சிலர் உண்மையில் இதுபோன்ற சக்திகளுடன் பிறக்கிறார்கள் என்றும்; மேலும் சிலர் அதை தியானம் மற்றும் பயிற்சி மூலம் பெறுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

அக்டோபர் 4, ஞாயிறு காலை 11 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1515, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது.

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *