நடிகர் – நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிறைந்த கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சி

விளம்பரங்கள்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மே 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது

Boys VS Girls Colors Kondattam
Boys VS Girls Colors Kondattam

‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’ என்னும் பொழுதுபோக்கு நிறைந்த ரியாலிட்டி ஷோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதில் இந்த வார இறுதியில் மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியை அதன் பார்வையாளர்களுக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடர்களில் நடிக்கும் முக்கிய பிரபலங்கள் ஒன்றிணைந்து பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த போட்டியானது நடிகர் மற்றும் நடிகைகள் என இரண்டு குழுக்களுக்கு இடையே நடைபெற உள்ளது. எனவே இந்த வார கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சி பார்வையாளர்களை மிகுந்த உற்சாகப்படுத்தும். 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளது.

கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியை நீங்கள் பார்த்து ரசிப்பதற்கான 3 முக்கிய காரணங்கள் வருமாறு:-

விளம்பரங்கள்

ஸ்டார் ரஷ்: பரத் மற்றும் சஸ்திக்கா ஆகியோரால் இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட உள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடர்களில் நடிக்கும் முக்கிய பிரபலங்கள் 2 குழுக்களாக பிரிந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள். நடிகர் குழுவில் பார்வையாளர்களின் இதயம் கவர்ந்த அருண் பத்மநாபன், சமீர், அலெக்சாண்டர், விஷ்ணு மற்றும் மனோஜ் ஆகியோரும் நடிகைகள் குழுவில் தர்ஷினி கவுடா, சந்திரிகா, சுஜுவாசன், ஜெயஸ்ரீ மற்றும் தர்ஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ்க் பஜார்: இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பல்வேறு புதிர் விளையாட்டுகள் இடம்பெறுவதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் இடம்பெற உள்ளது. இது பார்வையாளர்களுக்கான ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. அதாவது, பலூன் விளையாட்டு, வழுக்கும் தளத்தில் நடக்கும் போட்டி, கைகளை பயன்படுத்தாமல் ஆப்பிள் சாப்பிடும் போட்டி மற்றும் தண்ணீர் பாட்டிலை சமநிலையில் வைத்து பேலன்ஸ் செய்து இலக்கை அடையும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற உள்ளன.

மனதை மயக்கும் நிகழ்ச்சி: அத்துடன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் தாங்கள் கடந்து வந்த பாதையில் சில மகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும், அத்தோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பற்றி தெரியாத பல்வேறு விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

You email id will not publish to public