அவளும் நானும் – உங்கள் விஜய் தொலைக்காட்சியில் புதிய மெகா தொடர்

விஜய் டிவியின் புதிய மெகா தொடர் – அவளும் நானும்

அவளும் நானும், இந்த தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளை பற்றியது. நிலாவின் திருமணம் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. பிரவீன் பணக்கார வீட்டை சேர்ந்த பையன். நிலா வேறொருவரை விரும்புகிறார், இருந்தும் தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் போகிறது. திருமணத்தின் போது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்கிறார்.

குடும்பப் பெயரை காப்பாற்ற தியாவை நிலாவாக நிறுத்தி திருமணம் செய்து வைக்கிறார். நிலாவாக திருமணம் செய்து போகும் தியாவின் வாழ்கை என்னவாகும்? பெற்றோர்களை மீறி செல்லும் நிலாவின் வாழ்கை என்னவாகும்?. உருவங்கள் இடம் மாறின வாழ்கை தடம் மாறியது இதுவே இந்த கதையின் முக்கிய கரு. இந்த தொடரின் இயக்குனர் தனுஷ்.

மேலும், நடிகை மௌனிகா இந்த தொடரின் இரட்டை சகோதரி நிலா மற்றும் தியாவாக நடிக்கிறார். மௌனிகா இந்த தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு அடியெடுத்துவைக்கிறார். இந்த தொடரின் ப்ரவீனாக நடிகர் அம்ருத் நடிக்கிறார். இனி மதியம் தோறும் இந்த தொடர் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

அவளும் நானும்
அவளும் நானும்
You might also like

Leave A Reply

You email id will not publish to public