அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 09 முதல் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு
விஜய் டிவி தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்

விஜய் டிவி யில் புத்தம் புதிய தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒரு கதை. மேஜிக்கல் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புத தொடர்.
கதையின் நாயகன் அமன் ஒரு நவாப், ஒரு பூதத்தின் (ஜின்) வசம் உள்ளவர். அவர் என்ன நினைத்தாலும் அவருக்கு உதவுவதற்கு ஒரு பூதம் எப்போதும் தயாராக இருக்கும். அவர் மனதில் எது நினைத்தாலும் அதை செய்வதற்கு அந்த பூதம் தயாராக இருக்கும்.

கதையின் நாயகி ரோஷினி ஒரு தேவதையை போன்றவள். தூய அன்பும் அழகும் நிறைந்த ஒரு நடன மங்கை. விதி மற்றும் மந்திரத்தின் மூலம் இவர்கள் இருவரும் வாழ்வில் இணையும் சந்தர்ப்பம் நேர்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் தொடரின் மாயக்கதை.
இத்தொடர் ஸ்டார் பிளஸ் சேனல்லில் “யே ஜாது ஹை ஜின் கா” வாக ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் பிரபலமான இந்த தொடர்கள் நேயர்களுக்காக பிரதேகமாக தமிழில் வழங்கப்படுகிறது.
