அன்புடன் குஷி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில்
அன்பு வுடன் குஷி (அன்புடன் குஷி) – ஜனவரி 27 முதல், இரவு 10 மணிக்கு

விஜய் டிவியில் “அன்புடன் குஷி” வரும் ஜனவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இத்தொடர் கலகலப்பு நிறைந்த ஒரு காதல் கதை ஆகும். அன்புடன் குஷி தொடரில் ப்ரஜன் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய் டிவி தொடர்களை பார்க்கும் நேயர்களுக்கு ப்ரஜன் எப்போதுமே ஒரு அபிமான ஹீரோ. காதலிக்க நேரமில்லை தொடர் முதல் சின்னத்தம்பி முதல் ப்ரஜன் க்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றல் மிகையாகாது.
அன்பு ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன், குத்துசண்டை வீரர், எப்போதும் அனைவரிடமும் துறுதுறுவென்று கலகலப்பாக இருப்பான். அன்பு ஆதித்யாலால் என்ற ஒரு வடக்கிந்திய பணக்காரர் வீட்டில் வேலை பார்த்து வருகிறான்.
ஆதித்யாலாலின் மகள் குஷி, அழகான இளம் பெண். ஹாஸ்டலில் தன் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகிறாள். குழந்தை பருவத்திலிருந்தே குஷி க்கும் அன்புவுக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அதையும் மீறி அன்பு அவளுக்கு பல சமயங்களில் உதவி செய்வான்.
குஷிக்கு தான் ஒரு சொந்த பிசினஸ் தொடங்கி சொந்த முயற்சியில் தொழிலதிபர் ஆகா வேண்டும் என்பது கனவு. ஆனால் அவர்களது வீட்டில் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடித்துவிடுவார்கள். அவளுக்கு இப்போது திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. தனது சொந்த வாழ்க்கையை உருவாக்க முடிவு செய்கிறாள்.
அன்புவிடம் குஷி உதவி கேட்கிறாள். இந்த சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் அன்பு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறான். அவனது விசுவாசம் சோதிக்கப்படுமா? அதற்கு அன்பு என்ன செய்யப்போகிறான்? அதற்க்கு அவள் என்ன செய்தாள் ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லவருகிறது ‘அன்புடன் குஷி’ தொடர். காணாதவறாதீர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்.