ஸ்பீட் கெட் செட் கோ ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு – விஜய் டிவி

Advertisement

திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவி ஸ்பீட் கெட் செட் கோ

ஸ்பீட் கெட் செட் கோ – ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு
ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு

புதுமையான கேம் ஷோக்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் விஜய் டிவி இப்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் “ஸ்பீட் கெட் செட் கோ” என்ற தலைப்பில் மற்றொரு கவர்ச்சிகரமான விளையாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை துடிப்பான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற DD தொகுத்து வழங்குகிறார்.

ஸ்பீட் கெட் செட் கோ இரண்டு அணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஊடகத்துறையில் பிரபலமான மூன்று ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்கள் உள்ளனர். இந்த இரு அணிகளும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியது இந்த ஸ்பீட் விளையாட்டு நிகழ்ச்சி.

Advertisement

இரு அணிகளும் எதிர்கொள்ளும் பல நிலைகள் உள்ளன. முதல் சுற்று டம்ப் ஷரட்ஸ் ரிலே, இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று கடும் போட்டிகள் நிறைந்த சுற்றாகும். இறுதி சுற்று என்பது போட்டியாளர்களின் திறனைக் ஸ்பீட் மூலம் அவர்களின் ‘வேகத்தை’ சோதிக்கும் போட்டியாகும்.

தாழம்பூ
சாந்தினி – நடிகர்கள்

போட்டி சுற்றுகளில் ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு உறுப்பினர் ஒரே நேரத்தில் பணிகளைச் செய்வார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் டாஸ்க் களை விரைவாக முடிப்பதில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.இந்த கேம் ஷோ வேகம் மற்றும் விவேகம் நிறைந்த ஒரு விளையாட்டு போட்டியாகும். இது பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

டிசம்பர் 21 அன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் பங்கேற்பாளர்கள் சூப்பர் பாடகர் புகழ் ராஜலட்சுமி, மாளவிகா, சௌந்தர்யா, செந்தில், லோகேஷ், சத்யா.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1 மணிக்கு VIJAY டிவியில் ஸ்பீட் கெட் செட் கோ நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்.

Advertisement
You might also like

Leave A Reply

You email id will not publish to public