பிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்
பிக் பாஸ் 3 திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது
தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கிவரும் விஜய், பொழுதுபோக்கின் உச்சகட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிவைத்தது.

ஒவ்வொரு முறை பிக் பாஸ் ஷோ முடியும் போதும் அடுத்த பிக் பாஸ் ஷோவின் எதிர்பார்ப்பு நேயர்களிடையே அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. இந்த ஒரு ஷோவுக்கு மட்டும் சலிப்பே இல்லை என்பது உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் புதிய பரிமாணங்கள் உண்டு. புதிய முகங்கள், புதிய குணங்கள், புதிய பரிமாணங்கள் என்று ஏகப்பட்ட புதுமைகள் இதில் உண்டு.
பிக் பாஸ் 3 contestants
கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு அதிகம். மேலும், யார் இந்த சீசனை தொகுத்து வழங்கப்போகிறார் என்று வலம்வந்த அந்த கேள்விக்கு விடையாக உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் கொண்ட 15 sec டீஸர் வெளியானது மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. சினிமா துறையில் கலக்கிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு சீசன்களில் தொகுப்பாளராக களமிறங்கி ரசிகர்களை கவர்ந்தார்.

Online பிக் பாஸ் 3
இந்த சீசன், இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப் என்னும் புதிய பரிமாணத்தில் தொடங்கவுள்ளது. பிக் பாஸ் 3க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த முக்கியமான கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது அது யார் அந்த 15 போட்டியாளர்கள் என்று? பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற கணிப்பு அனைவரிடமும் தொடங்கிவுள்ளது. ஆனால் கடந்த சீசன்கள் போல இந்தமுறையும் முதல் எபிசோடில் யார் அந்த போட்டியாளர்கள் என்பதை அறிவிப்பார்கள்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள்.
Contents