தாழம்பூ சீரியல் விஜய் டிவி – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு
தாழம்பூ அக்டோபர் 07 முதல் இரவு 10 மணிக்கு
விஜய் டிவி அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய மெகா தொடர் தாழம்பூ. கற்பனைக்கும் புதிய முயற்சிகளுக்கும் பெயர் போன விஜய் டிவி, மகுடங்களுக்கு மகுடமாக தாழம்பூ என்ற புதிய தொடரை நேயர்களுக்காக வழங்குகிறது. இது வரும் அக்கோபர் 07 தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.

கதைச்சுருக்கம்
நாகலோகம் பாம்புகளின் உலகம். அவர்களின் தலைவர் நாகயோகி. வாசுகி அவரின் மகள். நாகா நாகலோகத்தின் இளம் போர்வீரன். வாசுகியும் நாகாவும் நிச்சயம் ஆனவர்கள். அவர்களது பொக்கிஷமான ஆத்மலிங்கம் நாகலோகத்தில் இருந்து தொலைந்து விடுகிறது. ஆத்மலிங்கம் இல்லையென்றால் அவர்களது சக்திகள் முழுமை பெறாது. அவர்களது உலகமே அழியும் நிலை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில் ஆத்மலிங்கத்தை மீட்டெடுக்க நாகா வீரன் பூலோகம் வருகிறான்.
இந்த நிலையில், அழகிய இளம் பெண்ணான ரேவதி மற்றும் அவளது குடும்பத்தினர் ஆத்மலிங்கத்தை பாதுகாத்து பூஜித்து வருகின்றனர்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்
நாகா மானிடனாக உருமாறி பூலோகம் வருகிறான். ஆத்மலிங்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ரேவதியிடம் நெருங்கி பழகுகிறான். ரேவதி நாகாவை காதலிக்கிறாள். அவளுக்கு நாகா மனிதன் அல்ல பாம்பு என்று தெரிய வருகிறதா? ஆத்மலிங்கத்தை காப்பாற்றுகிறாளா? காணாதவறாதீர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்
சாந்தினி (ரேவதி), அம்ரித் (நாகா), அங்கனா ராய் (வாசுகி), காளிதாஸ் (நாகயோகி), ரவி (சண்முகநாதன்)
இயக்கம் – சண்முகம் (ராஜிவ் மேனன் உதவியாளர்)
Contents