சூப்பர் சிங்கர் 7 கிராண்ட் ஃபினாலே லைவ் நவம்பர் 10 மாலை 3.30 மணி முதல்

விளம்பரங்கள்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் 7

சூப்பர் சிங்கர் 7
சூப்பர் சிங்கர் சீசன் 7

மிகப்பிரபலமான சூப்பர் சிங்கர் 7 இறுதிச்சுற்றை நெருங்கியுள்ளது. வரும் நவம்பர் 10 கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.

ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு. அந்த கனவுகளை நினைவாக்கும் ஒரு மேடை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து இசை துறைக்கு பல பாடகர்களை தந்துள்ளது.

சூப்பர் சிங்கர் 7 இறுதி வீரர்கள்

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசை கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதி போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் புண்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன். இவர்கள் பிரமாண்ட மேடையில் பாட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். பெருமைவாய்ந்த பல இசை கலைஞர்களை பார்த்த இந்த மேடை. இன்று வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வரும் சூப்பர் சிங்கர்ஸ், இந்த பிரமாண்ட மேடையில் பல இசை ஜாம்பவான்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் முன் பாடி அற்புதமான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர்.

விளம்பரங்கள்

ஒன்லைன் வோட்டிங்

இந்த முறை கிராண்ட் ஃபினாலே லைவ் இன்னும் பிரமாண்டமாய் அரங்கேறவிருக்கிறது. இந்த கிராண்ட் ஃபினாலேவில் பல சுவாரசியமான இசை விருந்துகள் காத்துக் கொண்டிருக்கிறது.மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள் , சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். இந்த பிரம்மாண்ட இசை போட்டியில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொள்கிறார் . மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றிபெறும் போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்படுகிறது.

இன்னும் பல பாடல்களும், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேரவுள்ளது, காணத்தவறாதீர்கள் நவம்பர் 10 மாலை 3.30 மணிமுதல் உங்கள் விஜய் டிவியில்

தமிழ் தொலைக்காட்சி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *