ஆயுத எழுத்து ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில்
திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு – ஆயுத எழுத்து
விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள் , இவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை, மேலும் அந்த கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெருசாக அபிப்ராயம் இல்லாதவர். இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் காலெக்டராக அந்த க்ராமத்தினுள் வருகிறார்.

கதை
அந்த கிராமத்தில் காளியம்மாள் சொல்வதை கேட்டு செயல்படுவது இவருக்கு பிடிக்கவில்லை படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார் அதற்காக இவர் செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது. இந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருது வேறுபாடு காரணமாக இருவருக்கும் ஒத்து வரவில்லை. காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்கு தெரியவில்லை. படித்த இந்த கலக்டர் பெண்ணனை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும்போது என்ன நடக்கும்? என்பதை சுற்றி கதை அமையும்.

நடிகர்கள் மற்றும் குழுவினர்
இதில் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்திரவாக நடிக்கவுள்ளார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சியின் பிரபலம் ஆவார்.மேலும் நடிகை மௌனிகா இந்த தொடரின் காளியம்மாவாக நடிக்கவுள்ளார். 80’s தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அம்ஜத் கான் இந்த தொடரின் ஷக்திவேலாக நடிக்கிறார், தமிழ் தொலைக்காட்சி தொடருக்கு இதன் மூலம் அறிமுகமாகிறார். ஆயுத எழுத்து தொடரின் இயக்குனர் ப்ரம்மா.பல திருப்பங்கள் கொண்ட இந்த தொடரை காணத்தவறாதீர்கள்
Contents